யூட்யூப் சேனல் ஒன்றில் எம்.எஸ்.பாஸ்கரின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். காணொளி முடியும் போது "யப்பா என்ன மாதிரியான நடிகன் " என்று தோன்றியது.குறிப்பிட்ட காட்சியைப் பற்றியோ அல்லது கதாபாத்திரத்தைப் பற்றியோ பேசத் தொடங்கும் போதே கணநேரத்தில் உடல்மொழி, வசன உச்சரிப்பு, சூழலுக்கு ஏற்ற முக வெளிப்பாடுகள் என அனைத்துவிதத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிப் போகிறார். கண்ணீர்த் துளிகள் வேண்டிய நேரத்தில் அவரைக் கேட்காமலே கன்னங்களை நனைக்கின்றன. பல வருடங்களுக்கு முந்தி பேசிய வசனங்களை அச்சு பிசகாமல் மனப்பாடமாக பேசுகிறார்.
நம் வாழ்வில் சில பேரைப் பார்க்கும் போது மட்டும் இவர் இன்னும் வாழ்வில் மேல வரவேண்டும். இவர் இந்த இடத்தில் இருக்க வேண்டிய நபர் இல்லை. மேலும் வாழ்வில் உயர வேண்டும். வாய்ப்புகள் அமையும் தருணத்தில் மற்றவர்கள் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தைக் கண்டிப்பாக அவர் அடைவார் என்று ஆழ்மனது அவ்வப்போது ஆருடம் சொல்லும். அது நம் நண்பராகவோ, நமக்கு வேண்டியவராகவோ அல்லது நாம் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கு அறிமுகமில்லாத ஒரு நபராகக் கூடவோ இருக்கலாம். நேர்காணல் முடியும் போது "எம்.எஸ்.பாஸ்கர் என்னும் நடிகனை"ப் பார்த்து அப்படித்தான் தோன்றியது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment