பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் ரேங்க் பட்டியல் இந்தாண்டு வெளியிடப்படவில்லை. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களின் மன உளைச்சலை குறைக்கும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார். அதே போல பள்ளிகள் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளின் மதிப்பெண்களை முன்னிறுத்தி விளம்பரம் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஊருக்குச் செல்லும் வழியில் பெரும்பாலான இடங்களில் தங்கள் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர் என மதிப்பெண் மற்றும் புகைப்படத்துடன் விளம்பர பலகைகள் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இது நடப்பதுதான் என்றாலும் இந்தமுறை முதல்மதிப்பெண் என்னவென்று யாருக்குமே தெரியாது என்பதனால், அதைப் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியலை வெளியிடாதது பெரும்பாலான தனியார்ப் பள்ளிகளுக்கு நல்லதாக அமைந்துவிட்டதோ என்றும் தோன்றுகிறது. உதாரணத்திற்கு போனவருடம் இதுபோல் பத்து பள்ளிகளின் விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தது என்றால் இந்தமுறை சுமார் இருபது முப்பது பள்ளிகள் நாங்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று விளம்பரங்கள் செய்கின்றனர். அடுத்த வருடம் இது ஐம்பது ஆகும். அதற்கடுத்த வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இத்தகைய விளம்பரங்களால் பெற்றோர்கள் தரமான பள்ளிகளைக் கண்டறிந்து தேர்ந்தெடுப்பது கடினமாகிவிடும். மேலும் இப்போது நடக்கும் கட்டணக் கொள்ளையை விட இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது ஒருபுறமிருக்க, ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவன் மேல்நிலை வகுப்பில் எந்த பாடப்பிரிவைத் தெரிவு செய்ய வேண்டும் என்னும் விருப்பத்தை இன்னும் அந்தந்த பள்ளிகளே பெரும்பாலும் முடிவுச் செய்கின்றன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அந்த மாணவன் பெற்றிருக்கும் மதிப்பெண்ணைக் கொண்டு பெரும்பாலான தனியார்ப் பள்ளிகள் இதைச் செய்கின்றன. உதாரணத்திற்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தால்தான் மருத்துவ படிப்பிற்கான முதல் குரூப் கொடுப்போம். 400 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தால்தான் பொறியியல் படிப்பிற்கான இரண்டாம் குரூப் கொடுப்போம் என்கின்றனர். ஒருவேளை பள்ளிச் சொல்லும் மதிப்பெண் இல்லையென்றால் அவர்கள் அறிவுறுத்தும் குரூப்பையே விருப்பமில்லாமல் எடுத்துப் படிக்க மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். 300 அல்லது 350 மதிப்பெண் எடுத்த மாணவன் முதல் குரூப் எடுத்துப் படிக்கத் திறமையில்லாதவன் என்று எப்படி ஒரு பள்ளி முடிவுச் செய்ய முடியும்.
தனியார்ப் பள்ளிகளின் இத்தகையக் கொள்கைகளினால், பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண் எடுத்து மேல்நிலையில் விருப்பப்பாடமாக வணிகம் படிக்க விரும்பும் மாணவன் வலுக்கட்டாயமாக முதல் குரூப் எடுக்க நிர்பந்திக்கப்படுகிறான். 350 மதிப்பெண் எடுத்து மேல்நிலையில் முதல் குரூப் படிக்க விருப்பப்படுபவன், சம்மந்தமே இல்லாமல் இரண்டாம் குரூப்பிலோ அல்லது மூன்றாம் குரூப்பிலோ தள்ளப்படுகிறான். இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகள் தொடக்கத்திலேயே சிதைக்கப்படுகின்றன.
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்தே ஏதும் செய்ய முடியாது என்றாகிவிட்ட சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மேல்நிலை படிப்பின் பாடப்பிரிவைத் தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment