அன்றைய நாளில் "நாட்டில் நிகழ்ந்த மிகக் கொடுமையமான மனிதத்தன்மையற்ற செயல் இது" என்பதைத் தவிர வேறென்னவென்று சொல்வது..?
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள உல்ஹாசா நகர் என்னும் பகுதியில், கடையில் இருந்து பலகாரத்தை அனுமதி இல்லாமல் திருடித் தின்றுவிட்டார்கள் என்ற காரணத்திற்காக எட்டு மற்றும் ஒன்பது வயதுள்ள இரண்டு சிறுவர்களைக் கடையின் உரிமையாளரான முகமது பதான் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும் ஆத்திரம் குறையாமல் தன் மகன்களின் மூலம் அந்தச் சிறுவர்களின் தலைமுடியை பாதியாக மழித்து கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து ஆடையின்றி கண்களில் நீர் கரைபுரண்டோட நின்றிருந்த அந்தச் சிறுவர்களை வீடியோ எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.
இதைக் கவனித்துக் கொண்டு நின்றிருந்த அக்கம்பக்கத்து ஆட்கள் ஒருவர் கூட இக்கொடியச் செயலைத் தடுக்கவோ அல்லது தட்டிக் கேட்கவோ முன்வரவில்லை என்பதுதான் இதில் இன்னும் வருத்தமான விஷயம்.
தின்பண்டத்தின் மீது கைவைத்தவர்கள் கண்டிப்பாக பசியின் கொடுமையினால்தான் செய்திருப்பார்கள்.அந்தப் பலகாரங்களின் மதிப்பு அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து ரூபாய்க்குள்தான் இருக்கும். எல்லாவற்றையும் விட அவர்கள் விவரமறியா சிறுவர்கள்.கடையின் உரிமையாளர் நினைத்திருந்தால் திருடிய அச்சிறுவர்களை மன்னித்து புத்திமதி சொல்லி வழியனுப்பி இருக்க முடியும். ஆனால் அவரோ காட்டுமிராண்டித்தனமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அச்சிறுவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
தான் செய்யும் இச்செயல் அச்சிறுவனின் வாழ்க்கையில் எத்தகைய மனஅழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையும் எதிர்மறை எண்ணங்களையும் விளைவிக்கும் என்பதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல் கண்மூடித்தனமான செயல்களை கடையின் உரிமையாளர் தன் மகன்களுடன் செய்துள்ளார்.
சிறுவர்களை இரக்கமில்லாமல் அவமானப்படுத்தி, மனிதாபிமானமே இல்லாமல் அவர்களின் அழுகையை பார்த்து ஆனந்தம் கொண்டிருந்தவர்களை என்னவென்று சொல்வது. குழந்தைகள் மீதே வராத இரக்கமும், மனிதாபிமானமும் வேறார் மீது வரும்.

இளம் பிராயத்தில் சமூகம் என்ன தருகிறதோ அதையேதான் அவர்கள் வளர்ந்த பிறகு இச்சமூகத்திற்குத் திருப்பித் தருவார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment