நீட் தேர்விற்காக மாணவ மாணவிகள் வரம்புக்கு மீறி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும். அவ்வாறு சோதனைச் செய்யும் போது மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். சோதனைச் செய்ய மகளின் உள்ளாடையை கழற்றச் சொல்லும்போது அங்கு குழுமியிருந்த ஒரு தாய்க்கு கூடவா கோபம் வரவில்லை. மகனின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு சோதனைச் செய்யும் போது ஒரு தந்தைக்கு கூடவா எதிர்த்து கேள்விக் கேட்கத் தோன்றவில்லை.
முழுக்கை அணிந்திருந்த மகனின் சட்டையை அத்தனைப் பேரின் முன்னிலையிலும் கழற்றச் சொல்லி பெற்றோர்களே கத்திரிக்கோல் வாங்கி வந்து கத்திரிக்கிறார்கள். ஜீன்ஸ் அணிந்து வந்ததை அனுமதிக்காததால் ஓடிப் போய் மாற்றுத் துணி வாங்கி வருகிறார்கள்.
இதெல்லாம் என்ன மாதிரியான சோதனை முறைகள் என்ற எண்ணம் அத்தருணத்தில் யாருக்கும் எழவில்லையா..? இல்லையென்றால் என்ன மாதிரி சோதனைச் செய்தால் எங்களுக்கென்ன..! எவ்வளவு கீழ்த்தரமான சோதனைகள் வேணுமானாலும் செய்து எங்கள் பிள்ளைகளை அசிங்கபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் மனங்களை நோகடித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு தேவை மகன்/மகளின் நல்ல மதிப்பெண் மட்டுமே என்ற மதிப்பெண் மனநோயில் இருக்கிறார்களா பெற்றோர்கள்..?
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment