பேருந்து நிறுத்தங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சுவரொட்டிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. அந்தச் சுவரொட்டிகளில் எம்ஜிஆரின் முகத்தை விட ஜெயலலிதாவின் முகத்தைப் பார்த்தால்தான் மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. என்னதான் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று வரலாற்றில் மேலும் ஒருவரியை தனக்கென அடிக்கோடிட்டு ஆட்சி அமைத்த ஜெயலலிதா மட்டும் ஒருவேளை உயிர்த் துறவாமல் இருந்திருந்ததால் கழகத்தை நிறுவிய மற்றும் தன் அரசியல் ஆசானின் "நூற்றாண்டு விழா"வினை எப்படியெல்லாம் அமர்க்களப்படுத்தியிருப்பார். என்னென்ன கொண்டாட்டங்களை கனவுகளை மனதில் பட்டியலிட்டு வைத்திருப்பார். இந்தாண்டு முழுவதும் "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா"வினை கொண்டாடப்படவேண்டும் என்று கழகத்தினரிடம் சொன்னதாக நினைவு. உண்மையில் கழகத்தினர் ஜெயலலிதாவின் ஆன்மாவை போற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் நினைத்தததை விட ஒருபடி மேலாக "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா"வினை கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் எல்லாம் தலைகீழாக நிற்கிறது. அதிகார பசியில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் நினைவுகள் ஓரம் கட்டுப்பட்டுவிட்டன.
கட்சியை நிறுவிய தலைவரின் நூற்றாண்டில் அக்கட்சியே கவிழ்ந்துபோய் நிற்பது துரதிருஷ்டம். ஆளும் கட்சியாக இருக்கும் போதே இரண்டாக உடைந்து, சின்னம் இழந்து எந்தப் பக்கம் சாயும் என்று தெரியாமல் அந்தரத்தில் ஊசலாட வைத்து காலம் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறது..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment