அன்புள்ள
மூன்றாம் பிறையே
விரலில் வைத்த
மருதாணி உன் கன்னத்தில்
சிவக்கிறதே
மருதாணியால்
உன் கன்னங்கள்
சிவந்ததோ
உன் கன்னங்கள்
தொட்டு மருதாணி
சிவந்ததோ...!!!
மருதாணியே
முகம் காட்ட
மறுப்பவள் நீயே...!!!
தாவணி மேகங்களுக்குள்
ஒளிந்திருக்கும்
மஞ்சள் முகமே
ஒருமுறை
முகில் துகில் விலக்கி
முழுமதி காட்டு
முன்ஜென்ம
பாவங்கள் தீரட்டும்
இன்ஜென்ம
பாக்கியங்கள் தொடங்கட்டும்
எனக்கு...!!!
கார்த்திக் பிரகாசம்...
மூன்றாம் பிறையே
விரலில் வைத்த
மருதாணி உன் கன்னத்தில்
சிவக்கிறதே
மருதாணியால்
உன் கன்னங்கள்
சிவந்ததோ
உன் கன்னங்கள்
தொட்டு மருதாணி
சிவந்ததோ...!!!
மருதாணியே
முகம் காட்ட
மறுப்பவள் நீயே...!!!
தாவணி மேகங்களுக்குள்
ஒளிந்திருக்கும்
மஞ்சள் முகமே
ஒருமுறை
முகில் துகில் விலக்கி
முழுமதி காட்டு
முன்ஜென்ம
பாவங்கள் தீரட்டும்
இன்ஜென்ம
பாக்கியங்கள் தொடங்கட்டும்
எனக்கு...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment