கவிஞனுக்கு
ஓர் ஓவியை
வாழ்க்கைத் துணையானால்...?
பேனாவும்
தூரிகையும்
காதல் கொள்ளும்
எழுத்துக்கள்
வண்ணங்களில் குளிக்கும்
தூரிகைகள்
சொற்களைத் தீட்டும்
சொற்கள்
சிலையாகும்
தூரிகைகள்
எழுதக் கற்கும்
அருவமான உணர்வுகளுக்கு
உருவம்
உண்டாகும்
மௌன படங்களுக்குள்ளும்
மாபெரும்
உரையாடல்கள் நிகழும்
புன்னகை
ஓவியத்தில்
வண்ணங்களைக் கூட்டும்
கண்ணீர்
கவிதையில்
காயங்களைக் காட்டும்
கவிதைகள்
ஓவியமாகும்
ஓவியங்கள்
கவிதையாகும்
எழுதாத ஓவியத்தையும்
வரையாத கவிதையையும்
தேடித் தேடி இரவுகள்
தொலையும்...
கார்த்திக் பிரகாசம்...
ஓர் ஓவியை
வாழ்க்கைத் துணையானால்...?
பேனாவும்
தூரிகையும்
காதல் கொள்ளும்
எழுத்துக்கள்
வண்ணங்களில் குளிக்கும்
தூரிகைகள்
சொற்களைத் தீட்டும்
சொற்கள்
சிலையாகும்
தூரிகைகள்
எழுதக் கற்கும்
அருவமான உணர்வுகளுக்கு
உருவம்
உண்டாகும்
மௌன படங்களுக்குள்ளும்
மாபெரும்
உரையாடல்கள் நிகழும்
புன்னகை
ஓவியத்தில்
வண்ணங்களைக் கூட்டும்
கண்ணீர்
கவிதையில்
காயங்களைக் காட்டும்
கவிதைகள்
ஓவியமாகும்
ஓவியங்கள்
கவிதையாகும்
எழுதாத ஓவியத்தையும்
வரையாத கவிதையையும்
தேடித் தேடி இரவுகள்
தொலையும்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment