Skip to main content

ஆணிவேராய் நிற்கும் அம்பேத்கர் மன்றங்கள்...

சிறுவர்கள் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தவும், ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் போக்கவும், இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் வழித்தவறி சென்றுவிடாமல் நல்வழிப்படுத்தவும் வடசென்னையின் பல பகுதிகளில் அம்பேத்கர் மன்றங்கள் இன்னும் ஆணிவேராய் நின்றுக் கொண்டிருக்கின்றன.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இம்மன்றங்களை ஆரம்பித்த இளைஞர்கள் இன்றுவரை தம் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாய் இருந்து உதவிக் கொண்டிருக்கின்றனர்.

"சேவ் டிரஸ்ட்" என்ற அமைப்பு வட சென்னையின் பல பகுதிகளில் விரிந்துள்ள அம்பேத்கர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் மேற்குறிப்பிட்ட செயல்களைத் தொடர்ந்து எவ்வித தங்குதடையுமின்றி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. சேவ் டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் இச்செயல்களை முன்னின்று செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வமைப்பின் மூலம் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் பாடரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயன் பெறுகின்றனர். பள்ளிப்பாடம் மட்டுமில்லாமல் பொது அறிவு, கணினி அறிவு உட்பட சமூக அக்கறை உள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்கின்றனர்.

அலுவலகத்தில் உள்ள சமூகத் தொண்டு செய்யும் அமைப்பின் மூலம் அந்த அமைப்பைச் சந்தித்தோம். மாணவர்களுக்காக அவர்கள் கேட்டுக் கொண்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிகள், வடிவியல் பெட்டிகள், எழுது கோல்கள், எழுது பலகைகள், தண்ணீர் பாட்டில்கள் என எங்களால் முடிந்ததை விட ஒருபடி அதிகமாக வாங்கிக் கொடுத்தோம்.விலையை மட்டும் வைத்து பார்த்தால் இவையெல்லாம் பெரிய மதிப்பிலான பொருட்கள் கிடையாது தான். ஆனால் ஒரு பொருளின் மதிப்பு விலையைக் கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அந்தப் பொருளின் மதிப்பான விலை பெரும்பாலும் இல்லாதவரின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. அந்தவகையில் மிகவும் மதிப்புயர்ந்த பொருட்களைக் கொடுக்கையில் அந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பார்த்து மனம் பூரித்து நின்றது.

அந்தக் கூடத்தில் மாலை வகுப்புக்காகக் கூடியிருந்த சிறுவர்களிடம், உங்களுக்கு பிடித்த தலைவர் யார்.? யாரைப் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்..? என்றுக் கேட்ட அடுத்த நொடி, "ஒரு சிறுவன் எழுந்து எனக்கு அம்பேத்கரைப் பிடிக்கும். அவரைப் போலாக நான் விரும்புகிறேன்"...!! என்று பொட்டில் அடித்தது போல் கூறினான். கைத்தட்டல்கள் ஓய கடிகார முட்கள் வேகமாய் ஓட வேண்டியிருந்தது.

காலங்கள் மாறிவிட்டன. கனவுகள் நினைவாகவில்லை ஆனாலும் நம்பிக்கை இன்னும் நீர்த்து போய்விடவில்லை.

கார்த்திக் பிரகாசம்...



Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...