'இப்போ எவ்வளவோ பரவால்ல மாப்ள. மூணு வேள சாப்புட முடியுது. வீட்டுக்குப் பணம் அனுப்ப முடியுது. எனக்குனும் கொஞ்சம் சேமிப்புக்கு எடுத்து வைக்க முடியுது.ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இது எதுவுமே இல்லாம இருந்தத யோசிச்சா உடம்பெல்லாம் படபடப்பா இருக்கு. வேல இல்லாம, சரியா தூங்காம, சோத்துக்குக் காசு இல்லாம கஷ்டப்பட்டதெல்லாம் இப்போ நெனைச்சாக்கூட... யப்பா..! அப்டியே ஒரு நிமிஷம் கண்ல தண்ணீ வந்துருது. ஆனாலும் எப்டியோ அடிச்சி புடிச்சி மேல வந்துட்டேன்... என்ன நெனைச்சு நானே பெருமபட்டுக்குறேன் மாப்ள '
இதுல பெருமபட்டுக்க என்னடா இருக்கு. இது உன் வாழ்க்க. நீ முன்னேறனும்னா ஓழைக்கனும்.அதுக்குக் கஷ்டப்பட்டு தான் ஆகணும். நீ ஏதோ அடுத்தவன் முன்னுக்கு வரத்துக்காகக் கஷ்டப்பட்ட மாதிரி சொல்ற. ஒவ்வொரு நாளும் முன்னாடி நாள் ஒழைச்சத விட அதிகமா ஒழைச்சா தான் வாழ்க்கைல ஒரு நூலாவது முன்னுக்கு வர முடியும். மேல வந்துட்டோம்னு ஓஞ்சிப் போய் ஒக்கந்துடாம அடுத்த லெவலுக்கு எப்படி போலாம்னு யோசி.. போடா..! போ..!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment