பஷீரின் "பால்யகால சகி"யை வாசிக்கிறேன்.
எப்போதுமே புறவெளியில் பறந்திடும் மனப் பறவை புத்தகம் வாசிக்கையில் மட்டும் அகவெளியில் பறக்கத் தொடங்கி விடுகிறது. அதுவும் பின்னோக்கி.
நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆண்டு தான் நாம் கல்லூரித் தடாகத்தில் முதலடி பதித்திருந்தோம். பள்ளி வாழ்க்கையில் நமக்குள் ஆழமாய் வேரூன்றியிருந்த நட்பு விஸ்தாரமாய் விரிந்து மோன நிழலைச் சுகமாய் பரப்பிக் கொண்டிருந்தது. அந்நிழலில் இளைப்பாறி நம் பள்ளிப்படிப்பு முடிந்தது. பின் இருவரும் வெவ்வேறு கல்லூரி..! வேறு வேறு பாடப்பிரிவு..! ஆனால் இவ்விரண்டும் நம் நட்பை முறிக்கவோ, இடைவெளியை ஏற்படுத்தவோ இல்லை. மாறாக அது நம் பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது. தொலைவைத் தொலைந்து போகச் செய்தது.
வழக்கம் போல அன்றைய சாயந்தரமும் எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். நான் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தேன்.
நான் கேட்டேன், " நாம் திருமணம் செய்து கொள்ளலாமா.? அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்.?. எனக்குத் தெரியும் இதற்குமுன் நாம் காதலைப் பற்றிக் கூட பேசியதில்லை.
ஆனால் உன் விழிகளில் எவ்வித பரபரப்பும் பதற்றமும் இல்லை. அவை நிதானமாக என் கண்களை உற்று நோக்கின.
"பெற்றோர் நம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, நம் நட்பின் மீது வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கை. அதன் வெளிப்பாடு தான் நீயும் நானும் இப்படி காலம் நேரம் பாராமல் இணைந்தே பயணிக்கிறோம். நீ என் வீட்டிலேயே இரவு உறங்குகிறாய். என் அம்மா ஏனென்று கேட்பதில்லை. அதே போல், நான் உன் வீடே கதியென்று கிடக்கிறேன். உன் அப்பா என்னைச் சந்தேகிக்கவில்லை.என் அம்மா என்னைத் திட்டியதும் இல்லை. இது நம் நட்பின் மேல் கொண்ட நம்பிக்கையால் அவர்கள் நமக்குக் அளித்திருக்கும் சுதந்திரம். அவர்கள்முன் "நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம்" என்று போய் நிற்பது நம் நட்பின் மீதான அவர்களின் நம்பிக்கையை உடைப்பது போலாகிவிடும். அது அவர்களுக்கு நாம் செய்திடும் மிகப் பெரிய துரோகம். அதை ஒருபோதும் நாம் செய்திட வேண்டாம். மேலும் முக்கியமாக
உன்னில் ஆத்மார்த்தமான அன்பு வைத்திருக்கிறேன். அது அட்சயம் போன்றது. தீராதது. அதைக் கட்டி வைக்க கல்யாணம் என்ற கட்டுப்பாட்டுக் கயிறு அவசியமில்லை. எதுவொன்று இல்லாமல் போனாலும் உன் மீதான என் அன்பு இருக்கும். என் பாசம் இருக்கும். நம் நட்பு இருக்கும். மூச்சுள்ளவரை அது நம்மை இணைத்திருக்கும்." என்றாய்..
நான் ஆச்சரியத்தில் உன்னையே பார்த்து கொண்டிருந்தேன்.
"இவளுக்கு இப்படியொரு தீர்க்கமானப் பார்வையா.? உந்தன் ஞானம் என்னைச் சிலிர்க்கச் செய்தது. நமக்குள் கல்யாணம் என்ற ஒன்று இல்லாமல் போனாலும், என் அன்பை எல்லாமுறைகளிலும் உனக்கு வெளிப்படுத்த முடியும் காமத்தின் வழியை மட்டும் தவிர்த்து. உன் மீதான எந்தன் அன்பு காமத்தை முன்னிறுத்தியது அல்ல. ஆக உன் பதில் எனக்குச் சற்றும் ஏமாற்றமாக இருக்கவில்லை."
அன்று எவ்வித ஏமாற்றமும், மனக் குழப்பமமுமின்றி நாம் வீட்டை அடைந்தோம்.
உனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்றும் எவ்வித ஏமாற்றமும், மனக் குழப்பமமுமின்றி நட்பென்னும் படகில் நாம் பாரமில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
மேகங்கள் இல்லாத வானிலிருந்து எங்கிருந்தோ விழுந்த மழைத் துளியினால் புதிதாகச் சிறகு முளைத்த பறவையை போல நினைவுகள் மனதுக்குள் சிறகடிக்கின்றன...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment