"என்னங்க.! அவ தான் சொல்றானா நீங்களும் சரிங்குறீங்க. பையன் வீடு எப்பிடி.? சொத்துப்பத்து நெலம்புலம் பத்திலாம் எதுவுமே விசாரிக்காம நீங்க பாட்டுக்கு...
எதுவுமே தெரியாத எவனோ ஒருத்தன அவ காதலிப்பாளாம். இவரு உடனே சரி பரவால்ல கண்ணு நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறன்னு சொல்லுவாராம். நல்லா கதையா இருக்கே." கல்யாணம் ஆனது முதல் கணவனை அதிகம் எதிர்த்துப் பேசிடாத துளசி, தன் பெண்ணின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம் என்றவுடன் கோபத்துடனும் ஆதங்கத்துடனும் மனம் பொறுமினாள்.
ஆனால் அவள் கூறிய எதையும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கினான் மித்ரன்.
பருவத்தில் வந்த பக்குவமில்லாத காதல் அல்ல அது. மற்றவரின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கத் தெரிந்த பிறகு, வாழ்க்கையின் மீதும், காமத்தின் மீதும் ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு உண்டானக் காதல். இருந்தாலும் குடும்பத்தின் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலை, நேரடியாகவும், மறைமுகமாகவும் அவன் மீது சுமத்தப்பட்டிருந்த கடமைகள் அவனை அக்காதலை ஏற்றுக் கொள்ள விடவில்லை. அந்தப் பெண்ணும் மித்ரனின் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டாள். ஆனால் அவள் மித்ரனிடம், " நாளை உன் மகனோ அல்லது மகளோ, நான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்று உன்முன் வந்து நிற்கும் போது, நீ அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டு அவர்களை ஒன்றுச் சேர்க்க வேண்டும். அது தான் நீ நம் காதலுக்கும், நம் புரிதலுக்கும் நீ செய்யும் மரியாதை" என்று சத்தியம் கேட்டாள்.
மித்ரனும் மறுப்பேதும் சொல்லாமல் அவளுக்கு உறுதியளித்தான்.
கண்ணீர்த் துளிகள் அக்காட்சியை இப்பொழுது மங்கலாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தின.
துளசி அருகில் வந்து மித்ரனின் தோள் மீது கை வைத்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் மித்ரன்.
"என்னங்க ஆச்சு.? ஏன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.?" துளசிக் கேட்டாள்.
"நீ ஒண்ணும் பயப்படாதா. நான் அந்த பையனப் பத்தியும், குடும்பத்தப் பத்தியும் ஏற்கனவே நல்லா விசாரிச்சுட்டேன். நல்ல குடும்பமாத் தான் இருக்காங்க. இதவிட நல்ல வரன் நம்ம பொண்ணுக்குக் கெடைக்காது. நீ வீணா மனசப் போட்டுக் கொழப்பிக்காத. எல்லாம் நல்லபடியா நடக்கும்." மித்ரன் நம்பிக்கைக் கூறினான்.
அதே நம்பிக்கையுடன் மித்ரனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் துளசி.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment