எனக்கொரு ஆசை
இல்லை - இது
அப்பாவின் ஆசை
மரபுவழி நோய் பரிமாற்றத்தைப் போல்
மரபுவழி ஆசை பரிமாற்றம்
என்னை அறியாமல் எனக்குள்
ஏற்றப்பட்டிருக்கிறது
மூளையின் ஏதோவொரு மூலையில்
பதியவைக்கப்பட்டிருக்கிறது
சாகறதுக்குள்ள ஒரு வீடு
சமாதிக்கு முன்னே சொந்தமாக ஒரு கூடு
அடுக்குமாடி பலகணி பளிங்குத்தரை
லட்சங்களில் ஆடம்பரம் யாருக்கு வேண்டும்
படுத்ததும் கவலைகளின்றி உறங்கிடத்
தனிமையினைத் தாலாட்டிட
ஏக்கம் தொலைத்திடப்
பாசம் பெருக்கிட
அன்புடன் அரவணைத்திட
உயிரினும் உயிராய் ஒற்றைக் கூடு
அவ்வளவே
கார்த்திக் பிரகாசம்...
இல்லை - இது
அப்பாவின் ஆசை
மரபுவழி நோய் பரிமாற்றத்தைப் போல்
மரபுவழி ஆசை பரிமாற்றம்
என்னை அறியாமல் எனக்குள்
ஏற்றப்பட்டிருக்கிறது
மூளையின் ஏதோவொரு மூலையில்
பதியவைக்கப்பட்டிருக்கிறது
சாகறதுக்குள்ள ஒரு வீடு
சமாதிக்கு முன்னே சொந்தமாக ஒரு கூடு
அடுக்குமாடி பலகணி பளிங்குத்தரை
லட்சங்களில் ஆடம்பரம் யாருக்கு வேண்டும்
படுத்ததும் கவலைகளின்றி உறங்கிடத்
தனிமையினைத் தாலாட்டிட
ஏக்கம் தொலைத்திடப்
பாசம் பெருக்கிட
அன்புடன் அரவணைத்திட
உயிரினும் உயிராய் ஒற்றைக் கூடு
அவ்வளவே
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment