அரைக்கால் டவுசர் காலத்தில் அரசியல் தெரியாது
மதம் தெரியாது குறிப்பாகப் பக்தி கிடையாது
திருவிழா பண்டிகை - அதெல்லாம் கொண்டாட்டம்
கவலைகளை மறப்பதற்கு ஓர் காரணம்
அன்பைப் பகிர்வதற்கு ஓர் வாய்ப்பு
நினைத்துப் பார்த்தால்
விசேசம் விநாயகருக்கோ ஏசு நாதருக்கோ
நபிக்கோ பெரிய நாயகி அம்மனுக்கோ
அதெல்லாம் பிரச்சனையில்லை
ஒருவீட்டில் சுண்டல் ஒருவீட்டில் கொழுக்கட்டை
ஒருவீட்டில் கேக் ஒருவீட்டில் கோலம்
நண்பர்கள் காசு சேர்த்து ஓலைக் குடில் வேய்ந்து
சிலை வைத்து நாள் முழுவதும் அமர்க்களம்
பெருக்கெடுத்த அறியா வயதின் ஆனந்தம்
இன்று தெருவோர கடையின் தரையில்
கூட்டமாக அமர்ந்திருக்கும்
களிமண் விநாயகரின் கண்களில் கலவரம்
களிமண் உருவில் வளர்ந்திருக்கும் மதம்
விநாயகரின் சாயலில் மறைந்திருக்கும் வெறி
மத வியாபாரத்தில் பண்டிகைகள் லாபம்
வெளுத்துப் போன சாயம்
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார்
பிள்ளையார்
மதம் தெரியாது குறிப்பாகப் பக்தி கிடையாது
திருவிழா பண்டிகை - அதெல்லாம் கொண்டாட்டம்
கவலைகளை மறப்பதற்கு ஓர் காரணம்
அன்பைப் பகிர்வதற்கு ஓர் வாய்ப்பு
நினைத்துப் பார்த்தால்
விசேசம் விநாயகருக்கோ ஏசு நாதருக்கோ
நபிக்கோ பெரிய நாயகி அம்மனுக்கோ
அதெல்லாம் பிரச்சனையில்லை
ஒருவீட்டில் சுண்டல் ஒருவீட்டில் கொழுக்கட்டை
ஒருவீட்டில் கேக் ஒருவீட்டில் கோலம்
நண்பர்கள் காசு சேர்த்து ஓலைக் குடில் வேய்ந்து
சிலை வைத்து நாள் முழுவதும் அமர்க்களம்
பெருக்கெடுத்த அறியா வயதின் ஆனந்தம்
இன்று தெருவோர கடையின் தரையில்
கூட்டமாக அமர்ந்திருக்கும்
களிமண் விநாயகரின் கண்களில் கலவரம்
களிமண் உருவில் வளர்ந்திருக்கும் மதம்
விநாயகரின் சாயலில் மறைந்திருக்கும் வெறி
மத வியாபாரத்தில் பண்டிகைகள் லாபம்
வெளுத்துப் போன சாயம்
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டார்
பிள்ளையார்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment