கம்பீர கண்களில்
கருணைக் காட்டு
கருணைக் காட்டு
கண்ணம்மா
இசை மதுவினால்
தள்ளாடுகின்றன
என் இரவுகள்
கோப்பையில்
ராஜாவும் ரஹ்மானும்
வண்ண வண்ணமாய்
கண்முன்னே விரிந்திருப்பது
வானவில் அல்ல
உனக்கு நீயே பூட்டிக் கொண்ட
அலங்கார சிறைக் கம்பிகள்
உனக்கு நினைவிருக்கிறதா
மழைக் காலத்தின்
ஓர் மாலைப் பொழுதில்
நோயுற்றிருந்தேன்
உள்ளங்கையிலும்
புறங்கழுத்திலும்
முத்தங்கள் தந்தாய்
எப்போதும் நோயுற்றே
கிடக்கலாம்
மழை நின்ற பின்
மனம் சொட்டியது
கடைசி சொல்லுக்காகக்
காத்திருக்கும் கவிதையே
உடைத்தெறி விலங்கை
வா சிறை விட்டு
அரவணை
என்னை வீழ்த்து
முட்டாளாக்கு
அன்பு செய்
நாளை வரை எதற்கு
இன்றே வாழ்ந்துவிடுவோம்
கார்த்திக் பிரகாசம்...
இசை மதுவினால்
தள்ளாடுகின்றன
என் இரவுகள்
கோப்பையில்
ராஜாவும் ரஹ்மானும்
வண்ண வண்ணமாய்
கண்முன்னே விரிந்திருப்பது
வானவில் அல்ல
உனக்கு நீயே பூட்டிக் கொண்ட
அலங்கார சிறைக் கம்பிகள்
உனக்கு நினைவிருக்கிறதா
மழைக் காலத்தின்
ஓர் மாலைப் பொழுதில்
நோயுற்றிருந்தேன்
உள்ளங்கையிலும்
புறங்கழுத்திலும்
முத்தங்கள் தந்தாய்
எப்போதும் நோயுற்றே
கிடக்கலாம்
மழை நின்ற பின்
மனம் சொட்டியது
கடைசி சொல்லுக்காகக்
காத்திருக்கும் கவிதையே
உடைத்தெறி விலங்கை
வா சிறை விட்டு
அரவணை
என்னை வீழ்த்து
முட்டாளாக்கு
அன்பு செய்
நாளை வரை எதற்கு
இன்றே வாழ்ந்துவிடுவோம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment