எல்லா புத்தகங்களும்
ஒரே புத்தகமே
சிலதை அலசுகிறது
சிலதை அகற்றுகிறது
சிலதை அறிக்கிறது
சிலதை அரிக்கிறது
தெளிந்தும் குழப்பியும்
பக்கங்களில் தோய்கிறது
கனவை வளர்க்கிறது
கற்பனை தூண்டுகிறது
சிறையை உடைக்கிறது
துரோகம் தியாகம்
ஒரே புத்தகமே
சிலதை அலசுகிறது
சிலதை அகற்றுகிறது
சிலதை அறிக்கிறது
சிலதை அரிக்கிறது
தெளிந்தும் குழப்பியும்
பக்கங்களில் தோய்கிறது
கனவை வளர்க்கிறது
கற்பனை தூண்டுகிறது
சிறையை உடைக்கிறது
துரோகம் தியாகம்
தற்பெருமை அனுசரிப்பு
கழிசல் கழிவிரக்கம்
சுய விசாரணை
செய்கிறது
மனக் கூண்டில் அமர வைத்து
கேள்வி கேட்கிறது
முடிவை நம் பொறுப்பில் ஒப்படைத்து
விட்ட இடத்திலிருந்து
விடுபட்ட விசாரணையை
தொடர்கிறது அடுத்த புத்தகம்
கார்த்திக் பிரகாசம்...
கழிசல் கழிவிரக்கம்
சுய விசாரணை
செய்கிறது
மனக் கூண்டில் அமர வைத்து
கேள்வி கேட்கிறது
முடிவை நம் பொறுப்பில் ஒப்படைத்து
விட்ட இடத்திலிருந்து
விடுபட்ட விசாரணையை
தொடர்கிறது அடுத்த புத்தகம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment