சர்வ சாதாரணமாக நிகழ்கிறது ஓர் மரணம்
ஏதோவொரு கடையில் தயாராய் தொங்குகின்றன
இழவு வீட்டின் வாசத்தில் தொடுக்கப்பட்ட பூ மாலைகள்
சம்பிரதாய ஒப்பாரியும் அழுகையும்
சகிக்கவில்லையெனினும் அவசியமாகிறது
கண்ணீருக்கு மத்தியிலும்
சடங்கு சீர் செலவுகளை மதிப்பிடுகிறது
காசுள்ள கல்நெஞ்சம்
நீளும் ஆறுதல் கரங்களின் முடிவில் முகங்கள் இல்லை
மழிக்கப்பட்ட மயிர்க் கற்றையின் ஈரத்தில்
கடைசியாய் ஒருமுறை ஊற்றெடுக்கிறது பாசம்
ஏதோவொரு கடையில் தயாராய் தொங்குகின்றன
இழவு வீட்டின் வாசத்தில் தொடுக்கப்பட்ட பூ மாலைகள்
சம்பிரதாய ஒப்பாரியும் அழுகையும்
சகிக்கவில்லையெனினும் அவசியமாகிறது
கண்ணீருக்கு மத்தியிலும்
சடங்கு சீர் செலவுகளை மதிப்பிடுகிறது
காசுள்ள கல்நெஞ்சம்
நீளும் ஆறுதல் கரங்களின் முடிவில் முகங்கள் இல்லை
மழிக்கப்பட்ட மயிர்க் கற்றையின் ஈரத்தில்
கடைசியாய் ஒருமுறை ஊற்றெடுக்கிறது பாசம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment