அடைபட்ட கூண்டுக்குள்
சுதந்திரமாகச் சிறகடிக்கும்
பறவையின் சப்தத்தில்
தனிமையின் ஆற்றாமை
சுதந்திரமாகச் சிறகடிக்கும்
பறவையின் சப்தத்தில்
தனிமையின் ஆற்றாமை
புதிதாக வீட்டுக்கு வரும்
யார் எவரென்று அறியாத
விருந்தாளியிடம்
விளையாட்டு சாமான்களையெல்லாம்
காட்ட அடம் பிடித்து அழும்
குழந்தை கண்களின் திரவத்தில்
தனிமையின் விரக்தி
யார் எவரென்று அறியாத
விருந்தாளியிடம்
விளையாட்டு சாமான்களையெல்லாம்
காட்ட அடம் பிடித்து அழும்
குழந்தை கண்களின் திரவத்தில்
தனிமையின் விரக்தி
அடர்ந்த தாடி மீசைக்குள்
மரித்துப் போன குழந்தைத்தனம்
தனிமையின் அடர்த்தி
மரித்துப் போன குழந்தைத்தனம்
தனிமையின் அடர்த்தி
பிரியமானவர்கள் பிரிகையில்
தனிமையின் சுயரூபம்
தனிமையின் சுயரூபம்
விரும்பிடும் உள்ளம்
விலகி வெறுக்கையில்
தனிமையின் வலி
விலகி வெறுக்கையில்
தனிமையின் வலி
தன்னைத் தானே
விழுங்கிடும் உயிர்
தனிமையின் ஏமாற்றம்
விழுங்கிடும் உயிர்
தனிமையின் ஏமாற்றம்
பழகிப் போன சுயம்
தனிமையின் யதார்த்தம்
தனிமையின் யதார்த்தம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment