பண்டிகைக்கு அடுத்த நாள்
பிளாட்பார கடைகளில்
புது துணி மணிகள்
நேற்றில் பாதி விலைக்குக்
கிடைக்கும் என்பதை
அம்மா தான் சொன்னாள்
தங்க நகைக் கடைகள்
பெரும்பாலும் மூடியிருக்கும்
இருப்பினும் அவற்றின்
அலங்கார ஒளி விளக்குகள்
எரிய விடப்பட்டிருக்கும்
அவ்வொளி சாரலிலே
கவரிங் நகைக் கடைகளில்
வியாபாரம் நடக்கும்
எளிய மக்களைக் கவர்தலால்
கவரிங் எனப் பெயர்
வந்திருக்கலாம்
அம்மா தான் சொன்னாள்
புயல் வந்து ஓய்ந்தது போல்
வெறிச்சோடி இருக்கும் சாலைகளில்
நடக்க நடக்க ஆசையாக இருக்கும்
ஆனால் யாரோடு நடப்பது
அரக்கப் பரக்க இல்லாமல் செவிகளற்று
கிடக்கும் கை கால்கள்
பரம சுகமாக இருக்கும்
அன்று ஒரு நாளைப் போல்
நிம்மதியாக உறங்கியதில்லை
பிளாட்பார கடைகளில்
புது துணி மணிகள்
நேற்றில் பாதி விலைக்குக்
கிடைக்கும் என்பதை
அம்மா தான் சொன்னாள்
தங்க நகைக் கடைகள்
பெரும்பாலும் மூடியிருக்கும்
இருப்பினும் அவற்றின்
அலங்கார ஒளி விளக்குகள்
எரிய விடப்பட்டிருக்கும்
அவ்வொளி சாரலிலே
கவரிங் நகைக் கடைகளில்
வியாபாரம் நடக்கும்
எளிய மக்களைக் கவர்தலால்
கவரிங் எனப் பெயர்
வந்திருக்கலாம்
அம்மா தான் சொன்னாள்
புயல் வந்து ஓய்ந்தது போல்
வெறிச்சோடி இருக்கும் சாலைகளில்
நடக்க நடக்க ஆசையாக இருக்கும்
ஆனால் யாரோடு நடப்பது
அரக்கப் பரக்க இல்லாமல் செவிகளற்று
கிடக்கும் கை கால்கள்
பரம சுகமாக இருக்கும்
அன்று ஒரு நாளைப் போல்
நிம்மதியாக உறங்கியதில்லை
பாரமான நெஞ்சில்
ஊருக்குப் போய்விட்ட
பிள்ளைகளின் முந்தைய நாள்
சிரிப்பு நினைவுகளோடு
நீண்ட நெடிய தனிமை
வீட்டில் படுத்துறங்கும்
பண்டிகைக்கு அடுத்த நாள்
அம்மா தான் சொன்னாள்
ஊருக்குப் போய்விட்ட
பிள்ளைகளின் முந்தைய நாள்
சிரிப்பு நினைவுகளோடு
நீண்ட நெடிய தனிமை
வீட்டில் படுத்துறங்கும்
பண்டிகைக்கு அடுத்த நாள்
அம்மா தான் சொன்னாள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment