Skip to main content

அடுத்த நிறுத்தம்

துணையை மட்டும் நம்பிய 
போகும் இடம் அறியா 
ஏதிலி நான்
எங்கே போகிறதென்று
எனக்குத் தெரியாது
அவசரத்தில் வெவ்வேறு பெட்டிகளில் ஏறிவிட்டோம்
பெட்டிகளில் நாங்கள் மாறி ஏறிய சமாச்சாரம்
இரயிலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
அதன் போக்கில் வேகம் குறையாமல் செல்கிறது
என் பயத்தைப் புசித்தவாறு
அடுத்த நிறுத்தத்தில் இறங்கி
துணை இருக்கும்
பெட்டிக்கு மாறிக் கொள்
என்றவாறே நகர்கிறார்கள்
அருகிலிருப்பவர்கள்
போகும் இடமே அறியாத
பாதையைத் தொலைத்தவளுக்கு
அடுத்த நிறுத்தம் எப்படி
தெரியும்

கார்த்திக் பிரகாசம்...

Comments