பருவநிலை மாற்றம்
மழை குளிர் வெயில்
நன்கறிவாய்
பாங்கியின் மனச்சுழல்
உணர்வாட்டம்
அறிவாயா
காரணமே இல்லாமல்
கோபம் வரும்
சுவரைக் கூட
திட்டித் தீர்க்கத் தோன்றும்
கிச்சு கிச்சு மூட்டினால்
எரிச்சலாய் இருக்கும்
குரலை ஒசத்தினாலே
அழுகை கொட்டும்
இதழ்கள் விரியும்
புன்னகை இருக்காது
அழுக்கு ஆடை
அரக்காய் மணக்கும்
சோம்பல் உடம்பில்
சுறுசுறுப்பாய் இயங்கும்
தலையணை தனிமை விரும்பும்
படுக்கையோ மிஸ் யூவை கேட்கும்
கொசுக் கடிக்கும்
ஆறுதல் தேடும்
மௌனம் பேரிரைச்சலாய்
மொய்க்கும்
சகலமும்
சலனம் சங்கடமுமாய் நீளும்
இதற்கெல்லாம் கவலைப்படாதே
பெண்ணைச் சிக்கலாய் நினைக்காதே
நீ ஒன்றும் செய்ய வேண்டாம்
மூச்சடைக்காத முத்தமொன்றைத்
தந்துவிட்டு மௌனமாக
நகர்ந்துவிடு
கார்த்திக் பிரகாசம்...
நன்கறிவாய்
பாங்கியின் மனச்சுழல்
உணர்வாட்டம்
அறிவாயா
காரணமே இல்லாமல்
கோபம் வரும்
சுவரைக் கூட
திட்டித் தீர்க்கத் தோன்றும்
கிச்சு கிச்சு மூட்டினால்
எரிச்சலாய் இருக்கும்
குரலை ஒசத்தினாலே
அழுகை கொட்டும்
இதழ்கள் விரியும்
புன்னகை இருக்காது
அழுக்கு ஆடை
அரக்காய் மணக்கும்
சோம்பல் உடம்பில்
சுறுசுறுப்பாய் இயங்கும்
தலையணை தனிமை விரும்பும்
படுக்கையோ மிஸ் யூவை கேட்கும்
கொசுக் கடிக்கும்
ஆறுதல் தேடும்
மௌனம் பேரிரைச்சலாய்
மொய்க்கும்
சகலமும்
சலனம் சங்கடமுமாய் நீளும்
இதற்கெல்லாம் கவலைப்படாதே
பெண்ணைச் சிக்கலாய் நினைக்காதே
நீ ஒன்றும் செய்ய வேண்டாம்
மூச்சடைக்காத முத்தமொன்றைத்
தந்துவிட்டு மௌனமாக
நகர்ந்துவிடு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment