கனவெல்லாம் கண்டிருக்கிறேன்
நான் பார்த்ததில்லை
நண்பர்களில் சிலபேர்
பார்த்ததுண்டு
அனுபவித்ததில்லையென்று
சொல்லியிருக்கிறார்கள்
பறக்க முயன்ற பலமுறை
சிறகுகள் வெட்டப்பட்டன
எழுத முயன்ற எத்தனையோ சமயம்
விரல்கள் உடைக்கப்பட்டன
அச்சத்தால் அடக்கி ஒடுக்கி
அழுத்தப்பட்டன
உனக்கெல்லாம் எதற்கு அது.?
உனக்கெல்லாம் இதுவே அதிகம்.?
சிரைக்கும் மயிருக்குக் கிடைக்கும் மரியாதை
சிந்திக்கும் மனிதனுக்கு இல்லை
சிந்திய கண்ணீர்த் துளிகள்
சாக்கடையில் மிதக்கின்றன
கனவுகளின் குரல்வளையை நெரித்த
அப்பாவின் அதிகார கரங்களில்
முதன்முறை பறிக்கப்பட்டது
இன்றுவரை கிடைக்கவில்லை
நான் பார்த்ததில்லை
நண்பர்களில் சிலபேர்
பார்த்ததுண்டு
அனுபவித்ததில்லையென்று
சொல்லியிருக்கிறார்கள்
பறக்க முயன்ற பலமுறை
சிறகுகள் வெட்டப்பட்டன
எழுத முயன்ற எத்தனையோ சமயம்
விரல்கள் உடைக்கப்பட்டன
அச்சத்தால் அடக்கி ஒடுக்கி
அழுத்தப்பட்டன
உனக்கெல்லாம் எதற்கு அது.?
உனக்கெல்லாம் இதுவே அதிகம்.?
சிரைக்கும் மயிருக்குக் கிடைக்கும் மரியாதை
சிந்திக்கும் மனிதனுக்கு இல்லை
சிந்திய கண்ணீர்த் துளிகள்
சாக்கடையில் மிதக்கின்றன
கனவுகளின் குரல்வளையை நெரித்த
அப்பாவின் அதிகார கரங்களில்
முதன்முறை பறிக்கப்பட்டது
இன்றுவரை கிடைக்கவில்லை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment