நட்பே யாவற்றுக்கும்
தொடக்கப் புள்ளி
நீண்ட பேச்சுகள்
அக்கறையில் தோய்த்தெடுத்த
வார்த்தைகள்
அழுகையில் உடன்
அழும் அன்பான மனம்
நட்பின் ஊடுருவலிலே
சிறகுகளுடன் காதல்
முளைத்தது
பகிர்ந்திட வேண்டிய
நிர்ப்பந்தமின்றி
பாரமில்லாமல் பறந்தது
தொடக்கப் புள்ளி
நீண்ட பேச்சுகள்
அக்கறையில் தோய்த்தெடுத்த
வார்த்தைகள்
அழுகையில் உடன்
அழும் அன்பான மனம்
நட்பின் ஊடுருவலிலே
சிறகுகளுடன் காதல்
முளைத்தது
பகிர்ந்திட வேண்டிய
நிர்ப்பந்தமின்றி
பாரமில்லாமல் பறந்தது
எதிர்பாரா திருப்பத்தில்
எந்த சமிக்ஞையும் இல்லாமல்
பிரிவெனும் சகபயணியை
சுமந்து வந்த காலம்
பகிர்தலின் அவசியத்தைத்
தாமதமாய் உணர்த்தியது
எந்த சமிக்ஞையும் இல்லாமல்
பிரிவெனும் சகபயணியை
சுமந்து வந்த காலம்
பகிர்தலின் அவசியத்தைத்
தாமதமாய் உணர்த்தியது
அதற்குள்
தொடர் பகிர்தலினால்
பிறிதொரு வானத்துக்குள்
வலம்வர இசைந்துவிட்டது
அந்த காதல்
புதிதாய் அடையப்போகும் ஒன்றின்
மகிழ்ச்சியைக் காட்டிலும்
இருப்பதை இழத்தலின் வலியே
பெருந்துயர்
நிராகரிக்கப்படும் அச்சத்தில்
நட்பிற்குள் புதைந்தது
மற்றொரு
தொடர் பகிர்தலினால்
பிறிதொரு வானத்துக்குள்
வலம்வர இசைந்துவிட்டது
அந்த காதல்
புதிதாய் அடையப்போகும் ஒன்றின்
மகிழ்ச்சியைக் காட்டிலும்
இருப்பதை இழத்தலின் வலியே
பெருந்துயர்
நிராகரிக்கப்படும் அச்சத்தில்
நட்பிற்குள் புதைந்தது
மற்றொரு
காதல்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment