பிறப்பை ஒத்திப் போடும்
சக்தி மட்டும் இருந்திருந்தால்
தாமதமாய் பிறந்திருக்கலாம்
தலைமகனாய் பிறந்ததற்காக
பெருமிரவுகள் வருத்தமடைந்திருக்கிறேன்
ஒரேயொரு அக்கா இருந்திருந்தால்...!
ஒரு அண்ணன் இருந்திருந்தால்... !
எவர் கண்ணிலும் படாத
மற்றவர்களுக்கு மதிப்பில்லாத
சின்ன சின்ன தியாகங்கள்
இளம் நரையின்
கன்னத்துச் சுருக்கங்களில்
சொல்லாமல் தொலைத்துப் போன
குழந்தைத்தனம்
ஏற்றி வைக்கப்பட்ட பொறுப்புகள்
சூழ்ந்து நின்ற சுமைகள்
மூழ்கிப் போன இளமை
பல பொழுதுகள் ஏக்கப்பட்டிருக்கிறேன்
பின்னொரு நாளில்
சாதிச்சு காட்டிட்ட கண்ணு
குடும்பத்த தல தூக்கவச்சிட்ட
இனி நான் சந்தோசமா கண்ண மூடுவேன் என்று
மரணப் படுக்கையில் அப்பா
தேம்பித் தேம்பி அழும் வரை
காலம் கண்ணீராய் உடைந்தது
கார்த்திக் பிரகாசம்...
தாமதமாய் பிறந்திருக்கலாம்
தலைமகனாய் பிறந்ததற்காக
பெருமிரவுகள் வருத்தமடைந்திருக்கிறேன்
ஒரேயொரு அக்கா இருந்திருந்தால்...!
ஒரு அண்ணன் இருந்திருந்தால்... !
எவர் கண்ணிலும் படாத
மற்றவர்களுக்கு மதிப்பில்லாத
சின்ன சின்ன தியாகங்கள்
இளம் நரையின்
கன்னத்துச் சுருக்கங்களில்
சொல்லாமல் தொலைத்துப் போன
குழந்தைத்தனம்
ஏற்றி வைக்கப்பட்ட பொறுப்புகள்
சூழ்ந்து நின்ற சுமைகள்
மூழ்கிப் போன இளமை
பல பொழுதுகள் ஏக்கப்பட்டிருக்கிறேன்
பின்னொரு நாளில்
சாதிச்சு காட்டிட்ட கண்ணு
குடும்பத்த தல தூக்கவச்சிட்ட
இனி நான் சந்தோசமா கண்ண மூடுவேன் என்று
மரணப் படுக்கையில் அப்பா
தேம்பித் தேம்பி அழும் வரை
காலம் கண்ணீராய் உடைந்தது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment