பெண்மக்கள் பிறந்தால்
பேருவகை அடையும்
பெண்களைக் கொண்டாடி வணங்கும்
குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்தேன்
சீவி சிங்காரித்து
வெளிக் காட்டாமல்
கூண்டுப் பறவையைப் போல்
பொத்தி பொத்தி வளர்த்தார்கள்
வாலிபத்தில்
வேற்றுச் சாதிக்கார பையனைக்
காதலித்ததற்காகக் கண்ட துண்டமாக
வெட்டி ஆற்றில் வீசிவிட்டார்கள்
வாழ விடாமல் பின்
வருடத்திற்கொரு முறை படையலிட்டு
வணங்கிச் சாமியாக்கிவிட்டார்கள்
பெண்மக்கள் பிறந்தால்
பேருவகை அடையும்
பெண்களைக் கொண்டாடி வணங்கும்
குடும்பம்தான் அது
கார்த்திக் பிரகாசம்...
பெண்களைக் கொண்டாடி வணங்கும்
குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்தேன்
சீவி சிங்காரித்து
வெளிக் காட்டாமல்
கூண்டுப் பறவையைப் போல்
பொத்தி பொத்தி வளர்த்தார்கள்
வாலிபத்தில்
வேற்றுச் சாதிக்கார பையனைக்
காதலித்ததற்காகக் கண்ட துண்டமாக
வெட்டி ஆற்றில் வீசிவிட்டார்கள்
வாழ விடாமல் பின்
வருடத்திற்கொரு முறை படையலிட்டு
வணங்கிச் சாமியாக்கிவிட்டார்கள்
பெண்மக்கள் பிறந்தால்
பேருவகை அடையும்
பெண்களைக் கொண்டாடி வணங்கும்
குடும்பம்தான் அது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment