விட்டு விட்டுப் பெய்த மழையில்
கிழிந்த சட்டையின்
கிழியாத ஓரத்தைக் குடையாக்கி
நாய்க் குட்டியை ஏந்திக்
குடிசைக்கு ஓடினான்
இருவரையும் கருணையோடு
அணைத்துக் கொண்டது
கூரையிலிருந்து வழிந்த
ஒரு மழைத் துளி
கார்த்திக் பிரகாசம்...
விடாமல் நனைகிறது
தாயைத் தொலைத்து
வழித் தவறிவிட்ட
நாய்க்குட்டி
பெரும் உயிர்களுக்கான வெளியில்
சிறு உயிர்களுக்கு மதிப்பில்லை
தாயில்லாத உலகம்
கருணை அற்றது
வெம்புகிறது நாய்க்குட்டி
டயர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்
திடுமென வந்து நின்றான்
எங்கிருந்தோ வந்த மழையைப் போல
தாயைத் தொலைத்து
வழித் தவறிவிட்ட
நாய்க்குட்டி
பெரும் உயிர்களுக்கான வெளியில்
சிறு உயிர்களுக்கு மதிப்பில்லை
தாயில்லாத உலகம்
கருணை அற்றது
வெம்புகிறது நாய்க்குட்டி
டயர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்
திடுமென வந்து நின்றான்
எங்கிருந்தோ வந்த மழையைப் போல
கிழிந்த சட்டையின்
கிழியாத ஓரத்தைக் குடையாக்கி
நாய்க் குட்டியை ஏந்திக்
குடிசைக்கு ஓடினான்
இருவரையும் கருணையோடு
அணைத்துக் கொண்டது
கூரையிலிருந்து வழிந்த
ஒரு மழைத் துளி
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment