என்றைக்குமே
வெயிலை மறைத்திடாத
மழையைத் தவிர்த்திடாத
பேருந்து நிறுத்தத்தின்
நிழற்குடைக்குள்
பழைய நண்பர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்
மீட்டுக் கொண்ட அடையாளங்களில்
துருத்தி நிற்கும் அந்நியத்தை ஒளித்து
உரையாட முற்படுகிறார்கள்
ஒடிந்த சுய உருவைத் தொலைத்த
ஓரிரு நாற்காலிகள் இருந்தன
உடலை நீட்டி மடக்கி
என்ன முயன்றாலும்
அவற்றில் ஒருவராலும் மனமுற
ஆசுவாசமாக
அமர முடியவில்லை
பசையிழந்த அவர்களின்
பால்ய காலத்தைப்
போலவே
கார்த்திக் பிரகாசம்...
வெயிலை மறைத்திடாத
மழையைத் தவிர்த்திடாத
பேருந்து நிறுத்தத்தின்
நிழற்குடைக்குள்
பழைய நண்பர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்
மீட்டுக் கொண்ட அடையாளங்களில்
துருத்தி நிற்கும் அந்நியத்தை ஒளித்து
உரையாட முற்படுகிறார்கள்
ஒடிந்த சுய உருவைத் தொலைத்த
ஓரிரு நாற்காலிகள் இருந்தன
உடலை நீட்டி மடக்கி
என்ன முயன்றாலும்
அவற்றில் ஒருவராலும் மனமுற
ஆசுவாசமாக
அமர முடியவில்லை
பசையிழந்த அவர்களின்
பால்ய காலத்தைப்
போலவே
கார்த்திக் பிரகாசம்...
👌
ReplyDeleteநன்றி...
ReplyDelete