அதிகாலை சாரலில் ஆங்காங்கே
நனைந்திருக்கிறது சாலை
தகரக் கூரைகளில் மழையின் தாளம்
காற்றில் மிதக்கிறது
கடாயில் வேகும் மெதுவடையின் வாசம்
தொண்டைக் குழியில் குளிருக்கு இதமாய்
இறங்குகிறது தேநீர்
இந்த விடியல்தான் எவ்வளவு
ரம்மியமானது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment