Skip to main content

Posts

Showing posts from December, 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

பெரிய பெரிய ஹோட்டல்கள், மால்கள், வணிக கடைகள் அபார்ட்மெண்ட்கள் எல்லாம் சீரியல் பல்புகளில் தலைக்கு குளித்து தயாராக இருக்கின்றன...!!! ஜல்லிக்கட்டு தடை, ஆசியா கப் 20-20 இந்தியா வெற்றி, மக்கள் நலக் கூட்டணி, ஸ்வாதி படுகொலை, ராம்குமார் தற்கொலை, உடுமலை பேட்டை ஆணவக் கொலை, தமிழக சட்டமன்ற தேர்தல், அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று வரலாற்றுச் சாதனை, பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம், பியூஸ் மானுஸ் கைது, நா.முத்துக்குமார் மரணம், காவிரி பிரச்சனை, ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளி, பணமதிப்பு நீக்கம், எந்திரன் 2.0 முதல் பார்வை வெளியீடு, வர்தா புயல், ஜெயலலிதா மரணம், ஓபிஎஸ் மீண்டும் முதல்வர், சோ மரணம், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ விலகல், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு, எனக்கு வேலைக் கிடைத்தது மற்றும் இன்னும்பல தமிழக நிகழ்வுகளை தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டது 2016...!!! நேற்று நடந்த நிகழ்வுகள் இன்று நினைவுகளாக மாறுவது போல 2016 பல நினைவுகளைத் தந்துள்ளது. அதில் நல்ல நினைவுகளைப் பொக்கிஷமா...
பேருந்தில் பின் சீட்டில் ஒரு வயதான பாட்டி யாரிடமோ போன் பேசிக்கொண்டு வந்தாள். அடுத்த முன் சீட்டிலேயே நான் உட்கார்ந்திருந்தால் அந்தப் பாட்டி பேசியது தெளிவாகக் கேட்டது. "மவனாயிருந்தாலும் மவளாயிருந்தாலும் நம்ம கைல பத்து ரூவா காசு இருந்த தான் மருவாத. அதான் காய்ச்சனா கூட பரவாலன்னு வேலைக்கு போயிட்டு வாரேன்"... இதைக் கேட்டதும் உடனடியாகத் திரும்பி பார்த்தேன். அந்தப் பாட்டி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. அவளுடைய கண்கள் கலங்கியதற்கு காரணம் ஜன்னலின் வழியே வீசும் பனிக்காற்றா இல்லை மனதில் விளாசும் பாசக்காற்றா..? என்று தெரியாமலேயே பேருந்து அவளை இறக்கிவிட்டு குழப்பத்துடன் கடந்து சென்றது... கார்த்திக் பிரகாசம்...

கெட்ட வார்த்தையில் நட்பு...!!!

பள்ளியில் படிக்கும் போது, ஒரு நல்ல பையனுக்கு அடையாளங்களாக கடைப்பிடிக்கப்பட்ட காரணிகளில், மிக மிக முக்கியமான ஒன்று கெட்ட வார்த்தை பேசாமல் இருப்பது. "அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா.? ஒரு கெட்ட வார்த்தைக்கூட பேசமாட்டான்.." இப்படித்தான் ஒரு நல்லவனை அடையாளப்படுத்துவோம். போடாங்க லூசு..! இது தான் பள்ளியில் படிக்கும் போது நான் பேசிய அதிகபட்ச கெட்டவார்த்தை. இதற்கே, போடாங்கன்னு வேற ஏதோ சொல்லவந்து அப்படியே மாத்திட்டான்'னு நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். ஆதலால் நல்லவன் பட்டத்தை நிலைநாட்டுவதற்காகவே முடிந்தவரை கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்ப்போம். சொல்லாத கெட்ட வார்த்தையை சொல்லிவிட்டதாகச் சொல்லி வகுப்பில் என்னை அவமானப்படுத்திவிட்டான் என்று பேசிக் கொள்ளாமல் போன நண்பர்கள் உண்டு. இனிமேல் கெட்ட வார்த்தை பேசக் கூடாதென்று சத்தியம் வாங்கிய தோழிகள் உண்டு. அதே போல நல்லவன் பட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும், எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் கூடவே ஒரு கெட்ட வார்த்தையைச் சேர்த்துக்கொள்ளும் ஆட்கள் வகுப்பில் கண்முன்னே டான் ஆனார்கள். அவர்களுக்கென்று தனிக்கூட்டம்...
"முத்தங்களுடன் நான்" என முடித்திருந்த கடிதத்தில் முத்தங்கள் மட்டும் முடியாமல்...!!!        கார்த்திக் பிரகாசம்...

வாட்டர் பாயிண்ட்

பேருந்து நிலையங்களில் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட குடிநீர் விற்கும் நிலையத்தில் ஒரு லிட்டர் குடிநீர் விலை பத்து ரூபாய். மத்திய அரசின் உடனான ஒப்பந்தத்தின் பேரில் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் "ரயில் நீர்" ஒரு லிட்டர் பதினைந்து ரூபாய். பெரும்பாலான கடைகளில் விற்கப்படுவது என்னவோ இருபது ரூபாய். நம்மூரில் திருப்பிக் கேட்டால்தான் ஐந்து ரூபாய் சில்லரைக் கிடைக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் அதே ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட "வாட்டர் பாயிண்ட்" என்று அழைக்கப்படும் கடைகளில் ஒரு ரூபாய்க்கு 300 மில்லியும், ஒரு லிட்டர் குடிநீர் ஐந்து ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக ஒரு லிட்டர் குடிநீர்.. தி.நகர் பேருந்து நிலையத்தில் ஒரு விலை. மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு விலை. சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் ஒரு விலை. இந்த மூன்றும் குடிக்கத்தகுந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானா..! விலையின் வேறுபாட்டைப் பொறுத்து தண்ணீரின் தூய்மையும் வேறுபடுகிறதா.? இல்லை எல்லாம் ஒரே தண்ணீர் தான், ஒரு மாதிரியான தூய்மைத்தன்மை கொண்டதுதான் என்றால் விலையில் ஏன் இந்த வித்தியாசம். ...
காசில்லா நேரத்தில் வரும் "ஒயிட் போர்டு " பேருந்து கடவுளின் மீதான கரிசனத்தைக் கூட்டுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
"விழிப்புணர்வுத் தேவை" என்ற விழிப்புணர்வே மாற்றத்திற்கான முதல் தேவை...!!! கார்த்திக் பிரகாசம்...
உயர் அதிகாரியின் தொந்தரவால் காவலர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாறாக அது நம்மை சார்ந்தவர...
அலுவலுகத்திலுள்ள "சமூக சேவை செய்யும் அமைப்பின் மூலமாக" ஒரு குழந்தைகள் ஆதரவு இல்லத்திற்கு சென்றிருந்தோம். மொத்தம் பதினெட்டுக் குழந்தைகள். ஒவ்வொருக்கும் ஒரு கதை. ஆனால் அவற்றை சாதாரண ஒரு கதை என்ற அளவில் எளிதில் கடந்து விடமுடியாது. ஒவ்வொன்றும் நெஞ்சை உலுக்கும் மனதை உடைக்கும் கண்களை குளமாக்கும் கதைகள். அப்பா செத்துவிட்டார் என்பதற்காக அம்மாவால் ஆசிரமத்தில் விடப்பட்டவர்கள். அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார் என்பதால் அப்பாவால் இங்கு விடப்பட்டவர்கள். பெற்றோர்களை விபத்தில் இழந்தவர்கள். தான் எப்படி கருவுற்றேன் குழந்தை ஈன்றேன் என்றே தெரியாத, இயல்பு நிலையையே உணராத ஒரு பெண்ணின் குழந்தை. அப்பா அம்மா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதால் தாத்தா பாட்டியால் கவனிக்க முடியாமல் ஆதரவு இல்லத்திற்கு வந்தவர்கள் என்று துரத்தி விளையாட வேண்டிய வயதில் அனைவரும் அனாதைப் பட்டத்தால் சமூகத்தில் தூக்கி எறியப்பட்டவர்கள். நீங்கள் வளர்ந்து என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு போலீஸ், கலெக்டர், என்ஜினீயர், மிலிட்டரி என்று இடைஞ்சல் இல்லாமல் வந்து விழுந்தன குழந்தைகளின் பதில்கள். உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் வ...

மற்றுமொரு தலைகுனிவு..!

ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் போதே ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு கைதாகிப் பின்பு பதவியை இழந்தது தேச அளவில் தமிழகத...

சிகரெட்

நீ இன்று கொன்றால் நான் நின்று கொல்வேன்...!!! சாம்பலாவது இன்று நான் நாளையென்னும் ஓர் நாளில் நீ...!!! கார்த்திக் பிரகாசம்...
மகன் மடியில் தூங்குகிறான் மனைவி தோளில் சாய்ந்து துயில்கிறாள் கணவர் நடுவில் சொக்கி சொக்கி விழுகிறார் மூவரையும் இரயில் தாலாட்டிக் கொண்டிருக்கிறது...!!! கார்த்திக் ப...
நீ எந்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்று யாராவது என்னைக் கேட்டால், ஒரு டீயை "ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு குடித்த தலைமுறை" என்று சொல்லலாம். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் அதிகாலையில் வேதியியல் பாடத்திற்கு டியூஷன் போக வேண்டும். ஒவ்வொரு நாளுமே இரவு படுக்கப் போகும் போது எப்படியாவது நாளை மட்டம் அடித்துவிட்டு நன்றாக தூங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் டியூஷன் போகும் வழியில் இருக்கும் அந்த டீக்கடையில் டீக்குடிப்பதற்காகவே எப்படியாவது எழுந்து கிளம்பி விடுவேன். டீக்குடிக்கவென்று அப்பா இரண்டு ரூபாய் தருவார். ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு ஸ்ட்ராங்காக ஒரு டீயும், 50 பைசாவிற்கு ஒரு வரிக்கியும் சாப்பிடும் போது அப்படியொரு ஆத்மதிருப்தி கிடைக்கும். ஏதோ அன்றைய நாளுக்கான அத்தனை பலன்களும் ஒரேபொழுதில் கிடைத்துவிட்டதாகத் தோன்றும். அப்படித் தொடங்கிய டீக்குடிக்கும் பழக்கம் இன்றளவும் வரையறை இல்லாமல் நீண்டுக் கொண்டிருக்கிறது. நா.முத்துக்குமாரின் "டீக்குடிக்கும் முன் ஒரு டீ. டீக்குடிக்கும் போது ஒரு டீ. டீக் குடித்தப் பின் ஒரு டீ" என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது ...
மர மனிதர்கள் மனித மரங்களை வெட்டித் தீர்ப்பது போதாதென்று நேற்று இந்தப் புயல் வேறு தன் பங்குக்கு ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி சாலைகளில் வீசி எறிந்திருக்கிறது.. மாநகரம் முழுவதும் மரக் குவியல்கள். இப்போதைக்கு சாலைகளை முடக்கி இருக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது மட்டும் நம் வேலை அல்ல. தழைக்க வாய்ப்பிருக்கும் மரங்களை வெறுமனே வெட்டி வீசி விடாமல் அதை வாழ வைக்க வழிச் செய்ய வேண்டும். இழந்த மரங்களுக்கு ஈடாக அதே இடத்தில் அல்லது அருகாமை இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு முறையாகப் பராமரிக்க வேண்டும். இந்த வேலையை உடனே தொடங்க வேண்டும்.  இல்லையென்றால் இதுதான் வாய்ப்பென்று, மரங்கள் இருந்த தடங்களை முழுமையாக அழித்து அந்த இடங்களில் சிறுசிறு கட்டடங்களை முளைக்க வைத்து அதில் காசுப்பார்க்க ஒரு கூட்டம் தொடங்கிவிடும்.  கார்த்திக் பிரகாசம்...

ரஜினிகாந்த்...!!!

இந்தப் பெயரைக் கேட்டாலே மனதிற்குள் மகிழ்ச்சி  வெள்ளம் பொங்குகிறதே. ஏன்.? இந்த மனுசனின் பெயரைத் திரையில் பார்த்தாலே கண்கள் கலங்குகின்றதே. ஏன்.? யாரோ இவரைத் திட்டினா...
மாலை 5 மணி.. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். நிலையத்தில் இலவச Wi Fi என்பதால் காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு முகபுத்தகத்தில் மேய்ந்து க...
விட்டுக் கொடுப்பது "தோல்வி" என்றால் நாம் அதிகமுறை தோல்வியைச் சந்தித்தவர்களாக இருப்போம்...!!! கார்த்திக் பிரகாசம்...
முன்னாள் முதல்வரின் திடீர் இறப்பினால் தமிழகத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் சட்ட ஒழுங்கை நேர்க்கோட்டில் வைத்திருந்த காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாததற்கு இன்னும் இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று. டாஸ்மாக்'யை முன்கூட்டியே மூடியது. பெரும்பாலான அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முடிந்ததற்கு டாஸ்மாக்'யை மூடியது மிக முக்கியமான காரணம். இரண்டு. முன்பெல்லாம் தங்கள் தலைவர்களின் துயரச் சம்பவங்கள் அல்லது எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் போது மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்த முறையான தளங்கள் எதுவுமில்லை. யாரிடம் பகிர்ந்து கொள்வது, எப்படித் துயரத்தில் இருந்து மீள்வது என்று தெரியாமல் சிலர் அராஜக செயல்களை கையில் எடுக்க அது அப்படியே ஊர் முழுவதும் பரவி விடும். ஆனால் இன்று அந்தச் சூழ்நிலை இல்லை. துன்பம் மகிழ்ச்சி புகழ் கோபம் என எதுவாயிருந்தாலும் வெளிப்படுத்த சமூக வலைத்தளங்கள் கண்முன்னே இருக்கின்றன. தனது மனநிலையை வெளிப்படுத்தவும், அதை ஏற்றுக் கொள்ளவும் அல்லது விவாதம் செய்யவும் தனக்கென்று உண்டான அல்லது உருவாக்கப்பட்ட ...

டிசம்பர் 6...

டிசம்பர் மாதம் இன்னொரு கறுப்பு அடையாளத்தைத் தன் மீது பூசிக் கொண்டுள்ளது. அதிலும் டிசம்பர் 6.. நடந்து 24 வருடங்கள் ஆயிருந்தாலும் இன்றளவும் பதற்றத்துடன் நினைக்க வைக்கும் பாபர் மசூதி இடிப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக கடைசிவரை போராடிய அம்பேத்கரின் மறைவு... இந்த இரண்டு கொடூர சம்பவங்கள் போதாதென்று இன்னொரு துயரச் செய்தியை வரலாற்றில் தாங்கிக் கொண்டு நிற்கிறது இந்த தினம்.. கார்த்திக் பிரகாசம்...
என்னது..? பிச்சைக்காரர்கள் கூட ஸ்வைப் மெஷின் பயன்படுத்துகின்றனரா..! "தனக்கு உதவி செய்ய விரும்பும் நபரிடம் கையில் பணம் இல்லை என்று சொன்னதால், ஒன்றும் பிரச்சனை இல்லை என்னிடம் ஸ்வைப் மெஷின் இருக்கிறது" என்று ஒரு பிச்சைக்காரர் சொல்வது போல அமைந்த வாட்ஸ் அப் வீடியோவைப் பற்றி பெருமையாக இன்றொரு கூட்டத்தில் மோடி பேசியுள்ளார். மேலும், நோக்கம் நல்லதாக இருக்கும் போது இந்தியர்கள் புதியவற்றை வரவேற்க காலம் தாழ்த்துவதில்லை என்றும் கூறியுள்ளார். அது சரிதான்.. நல்லதை வரவேற்க நாங்கள் காலம் தாழ்த்துவதில்லை. அதனால் தான் இந்த அளவிற்கு பணத் தட்டுப்பாடு நிலவும் போதுக்கூட இதனால் கண்டிப்பாக ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதற்காக பிச்சைக்காரர்கள் பணமற்ற முறைக்கு தயாராகிவிட்டார்கள் என்று பெருமைப்பட முடியுமா..? முதலில் அந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் பிச்சை எடுப்பவர் கூட ஸ்வைப் மெஷின் வைத்திருக்கிறார் என்பதை பெருமைப்பட நினைப்பது எந்த விதத்தில் தனது திட்டத்திற்கு கிடைத்த வெற்...
காக்க வேண்டிய ஏரிகள் கட்டடங்களாகிவிட்டன ஆனால் போக்க வேண்டிய சேரிகள்...? கார்த்திக் பிரகாசம்...