உயர் அதிகாரியின் தொந்தரவால் காவலர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாறாக அது நம்மை சார்ந்தவர்களுக்கும், நம்மை நேசிப்பவர்களுக்கும் மேலும் பிரச்சனைகளையும், பொருளாதார மற்றும் மன ரீதியிலான உளவியல் சிக்கல்களையும் மட்டுமே கொடுக்கும். வாழும் போதுதான் பலவகையில் பலருக்கும் சிக்கலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது போதாதென்று தற்கொலை என்ற பெயரில் இறந்தும் நம்மை சார்ந்தவர்களுக்கு சிக்கல்களை தர வேண்டுமா என்ன..?
விருப்பமின்மை, அழுத்தம், தொந்தரவு மற்றும் வேறு காரணங்களால் வேலை பிடிக்கவில்லை என்றால் விடவேண்டியது வேலையைத் தானே தவிர. உயிரை அல்ல..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment