நீ எந்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்று யாராவது என்னைக் கேட்டால், ஒரு டீயை "ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு குடித்த தலைமுறை" என்று சொல்லலாம்.
டீக்குடிக்கவென்று அப்பா இரண்டு ரூபாய் தருவார். ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு ஸ்ட்ராங்காக ஒரு டீயும், 50 பைசாவிற்கு ஒரு வரிக்கியும் சாப்பிடும் போது அப்படியொரு ஆத்மதிருப்தி கிடைக்கும். ஏதோ அன்றைய நாளுக்கான அத்தனை பலன்களும் ஒரேபொழுதில் கிடைத்துவிட்டதாகத் தோன்றும்.
அப்படித் தொடங்கிய டீக்குடிக்கும் பழக்கம் இன்றளவும் வரையறை இல்லாமல் நீண்டுக் கொண்டிருக்கிறது. நா.முத்துக்குமாரின் "டீக்குடிக்கும் முன் ஒரு டீ. டீக்குடிக்கும் போது ஒரு டீ. டீக் குடித்தப் பின் ஒரு டீ" என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது
ஆனால் இன்று சென்னையில் ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு விலை. எட்டு ரூபாய் முதல் பன்னிரண்டு ரூபாய் வரை சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு டீயின் மதிப்பு உயர்ந்து கிடக்கிறது.
இப்பொழுது கடையில் டீக்குடித்துக் கொண்டிருக்கிறேன். மிதக்கும் நுரையோடு இறந்த காலமும் சேர்ந்தாடுகிறது...
கார்த்திக் பிரகாசம்...
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் அதிகாலையில் வேதியியல் பாடத்திற்கு டியூஷன் போக வேண்டும். ஒவ்வொரு நாளுமே இரவு படுக்கப் போகும் போது எப்படியாவது நாளை மட்டம் அடித்துவிட்டு நன்றாக தூங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் டியூஷன் போகும் வழியில் இருக்கும் அந்த டீக்கடையில் டீக்குடிப்பதற்காகவே எப்படியாவது எழுந்து கிளம்பி விடுவேன்.
டீக்குடிக்கவென்று அப்பா இரண்டு ரூபாய் தருவார். ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு ஸ்ட்ராங்காக ஒரு டீயும், 50 பைசாவிற்கு ஒரு வரிக்கியும் சாப்பிடும் போது அப்படியொரு ஆத்மதிருப்தி கிடைக்கும். ஏதோ அன்றைய நாளுக்கான அத்தனை பலன்களும் ஒரேபொழுதில் கிடைத்துவிட்டதாகத் தோன்றும்.
அப்படித் தொடங்கிய டீக்குடிக்கும் பழக்கம் இன்றளவும் வரையறை இல்லாமல் நீண்டுக் கொண்டிருக்கிறது. நா.முத்துக்குமாரின் "டீக்குடிக்கும் முன் ஒரு டீ. டீக்குடிக்கும் போது ஒரு டீ. டீக் குடித்தப் பின் ஒரு டீ" என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது
ஆனால் இன்று சென்னையில் ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு விலை. எட்டு ரூபாய் முதல் பன்னிரண்டு ரூபாய் வரை சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு டீயின் மதிப்பு உயர்ந்து கிடக்கிறது.
இப்பொழுது கடையில் டீக்குடித்துக் கொண்டிருக்கிறேன். மிதக்கும் நுரையோடு இறந்த காலமும் சேர்ந்தாடுகிறது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment