என்னது..? பிச்சைக்காரர்கள் கூட ஸ்வைப் மெஷின் பயன்படுத்துகின்றனரா..!
"தனக்கு உதவி செய்ய விரும்பும் நபரிடம் கையில் பணம் இல்லை என்று சொன்னதால், ஒன்றும் பிரச்சனை இல்லை என்னிடம் ஸ்வைப் மெஷின் இருக்கிறது" என்று ஒரு பிச்சைக்காரர் சொல்வது போல அமைந்த வாட்ஸ் அப் வீடியோவைப் பற்றி பெருமையாக இன்றொரு கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்.
மேலும், நோக்கம் நல்லதாக இருக்கும் போது இந்தியர்கள் புதியவற்றை வரவேற்க காலம் தாழ்த்துவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அது சரிதான்.. நல்லதை வரவேற்க நாங்கள் காலம் தாழ்த்துவதில்லை.
அதனால் தான் இந்த அளவிற்கு பணத் தட்டுப்பாடு நிலவும் போதுக்கூட
இதனால் கண்டிப்பாக ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்
ஆனால் அதற்காக பிச்சைக்காரர்கள் பணமற்ற முறைக்கு தயாராகிவிட்டார்கள் என்று பெருமைப்பட முடியுமா..?
முதலில் அந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் பிச்சை எடுப்பவர் கூட ஸ்வைப் மெஷின் வைத்திருக்கிறார் என்பதை பெருமைப்பட நினைப்பது எந்த விதத்தில் தனது திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருத இயலும்.
பிச்சைக்காரர்கள் அற்ற சமூகத்தை கட்டமைப்பதுதான் அரசின் கடமையே தவிர, கருப்பு பண ஒழிப்பிற்காக பிச்சை எடுக்கும் முறையை அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டனர் என்று கூறுவது அல்ல.
இதை அரசின் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றியென நீங்கள் நினைத்தால், அது உங்களுக்கு ஓட்டுப் போட்ட ஒட்டுமொத்த சாமானியர்களை ஏமாற்ற நினைக்கும் முயற்சியாகவே இருக்கும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment