அலுவலுகத்திலுள்ள "சமூக சேவை செய்யும் அமைப்பின் மூலமாக" ஒரு குழந்தைகள் ஆதரவு இல்லத்திற்கு சென்றிருந்தோம். மொத்தம் பதினெட்டுக் குழந்தைகள். ஒவ்வொருக்கும் ஒரு கதை. ஆனால் அவற்றை சாதாரண ஒரு கதை என்ற அளவில் எளிதில் கடந்து விடமுடியாது. ஒவ்வொன்றும் நெஞ்சை உலுக்கும் மனதை உடைக்கும் கண்களை குளமாக்கும் கதைகள்.
அப்பா செத்துவிட்டார் என்பதற்காக அம்மாவால் ஆசிரமத்தில் விடப்பட்டவர்கள். அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார் என்பதால் அப்பாவால் இங்கு விடப்பட்டவர்கள். பெற்றோர்களை விபத்தில் இழந்தவர்கள். தான் எப்படி கருவுற்றேன் குழந்தை ஈன்றேன் என்றே தெரியாத, இயல்பு நிலையையே உணராத ஒரு பெண்ணின் குழந்தை. அப்பா அம்மா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதால் தாத்தா பாட்டியால் கவனிக்க முடியாமல் ஆதரவு இல்லத்திற்கு வந்தவர்கள் என்று துரத்தி விளையாட வேண்டிய வயதில் அனைவரும் அனாதைப் பட்டத்தால் சமூகத்தில் தூக்கி எறியப்பட்டவர்கள்.
நீங்கள் வளர்ந்து என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு போலீஸ், கலெக்டர், என்ஜினீயர், மிலிட்டரி என்று இடைஞ்சல் இல்லாமல் வந்து விழுந்தன குழந்தைகளின் பதில்கள்.
உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் வாங்கித் தருகிறோம் என்று சொன்னதற்கு, அவர்கள் கேட்ட விஷயங்கள் அவர்களின் வயதுக்கே உண்டான குழந்தைத் தனத்தின் மிச்சமீதி. சிப்ஸ், கிண்டர் ஜாய், கம்மல் செட், இங்க் பென், லாங் சைஸ் நோட் என்று பெரிய பெரிய விஷயங்களை கேட்டப் பின்பு தான் புரிந்தது அவர்களுக்கு கிடைக்காதவற்றின் அருமை.
பொருளின் மதிப்பு விலையிலா இருக்கிறது கேட்பவரின் நிலையில் தானே உள்ளது. அவர்கள் கேட்ட அவர்களின் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தோம். வேறேதும் செய்ய முடியவில்லை அவர்களை சிலமணி நேரம் சிரிக்க வைப்பதைத் தவிர...!!!
அவர்களின் வாழ்க்கையில் அத்தனைச் சோகங்கள். பிள்ளைப் பருவத்தில் பெற்றோர்கள் இல்லாமல் வளர்வதை விட வேறென்னப் பெரிய துன்பத்தை கடவுளால் கொடுத்துவிட முடியும். ஆனாலும் சிரிக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் குழந்தைகள்..
எல்லாருக்கும் வாழ்க்கை எளிதானாக அமைந்துவிட விடுவதில்லை.. ஏனோ சமீப நாட்களில் இந்த உண்மை மனதில் அடிக்கடி நெருப்பாய்ச் சுட்டுக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment