முன்னாள் முதல்வரின் திடீர் இறப்பினால் தமிழகத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் சட்ட ஒழுங்கை நேர்க்கோட்டில் வைத்திருந்த காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாததற்கு இன்னும் இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.
ஒன்று. டாஸ்மாக்'யை முன்கூட்டியே மூடியது. பெரும்பாலான அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முடிந்ததற்கு டாஸ்மாக்'யை மூடியது மிக முக்கியமான காரணம்.
இரண்டு. முன்பெல்லாம் தங்கள் தலைவர்களின் துயரச் சம்பவங்கள் அல்லது எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் போது மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்த முறையான தளங்கள் எதுவுமில்லை. யாரிடம் பகிர்ந்து கொள்வது, எப்படித் துயரத்தில் இருந்து மீள்வது என்று தெரியாமல் சிலர் அராஜக செயல்களை கையில் எடுக்க அது அப்படியே ஊர் முழுவதும் பரவி விடும்.
ஆனால் இன்று அந்தச் சூழ்நிலை இல்லை. துன்பம் மகிழ்ச்சி புகழ் கோபம் என எதுவாயிருந்தாலும் வெளிப்படுத்த சமூக வலைத்தளங்கள் கண்முன்னே இருக்கின்றன. தனது மனநிலையை வெளிப்படுத்தவும், அதை ஏற்றுக் கொள்ளவும் அல்லது விவாதம் செய்யவும் தனக்கென்று உண்டான அல்லது உருவாக்கப்பட்ட ஒரு கூட்டம் அங்கே இருக்கிறது.
எனவே தனது ஆதங்கத்தையோ அல்லது வருத்தத்தையோ கொட்ட தெருவிற்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment