ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் போதே ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு கைதாகிப் பின்பு பதவியை இழந்தது தேச அளவில் தமிழகத்தின் மீது விழுந்த கறையாகவும், தலைகுனிவாகவும் கருதப்பட்டது.
இப்பொழுது, முதலமைச்சருக்கு அடுத்து மாநிலத்தின் உயரிய பொறுப்பாகக் கருதப்படும் "தலைமை செயலாளர்" வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான பணமும் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் மீதான அதிருப்தியையும் அதிர்ச்சியையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
அதிலும் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவுகையில் கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல் புது ரூபாய்த் தாள்கள் கைவசம் வைத்திருப்பது அதிகார முறைகேடு செய்யாமல் எப்படி சாத்தியம்.
ஆட்சியாளர்கள்தான் மக்களைப் பற்றி கவலைப்படாமல், தன் பங்கிற்கு முடிந்த வரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சாமான்ய மக்களின் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு முழுமனதாய் செயல்திறனோடு இயங்க வேண்டிய அரசு அதிகாரிகளும் ஊழல், சொத்துக் குவிப்பு என்று குறுகிய மனப்பான்மையில் செயல்பட ஆரம்பித்துவிட்டால் ஏற்கனவே அரசியல்வாதிகளால் பழுதாகி பாதிவழியில் நிற்கின்ற அரசு இயந்திரம் தடம் புரண்டுவிடாதா...!
கார்த்திக் பிரகாசம்...
அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு., முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்... நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும் நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை... நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது... என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்... நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...
Comments
Post a Comment