மர மனிதர்கள் மனித மரங்களை வெட்டித் தீர்ப்பது போதாதென்று நேற்று இந்தப் புயல் வேறு தன் பங்குக்கு ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி சாலைகளில் வீசி எறிந்திருக்கிறது.. மாநகரம் முழுவதும் மரக் குவியல்கள்.
இப்போதைக்கு சாலைகளை முடக்கி இருக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது மட்டும் நம் வேலை அல்ல. தழைக்க வாய்ப்பிருக்கும் மரங்களை வெறுமனே வெட்டி வீசி விடாமல் அதை வாழ வைக்க வழிச் செய்ய வேண்டும். இழந்த மரங்களுக்கு ஈடாக அதே இடத்தில் அல்லது அருகாமை இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு முறையாகப் பராமரிக்க வேண்டும். இந்த வேலையை உடனே தொடங்க வேண்டும்.
இல்லையென்றால் இதுதான் வாய்ப்பென்று, மரங்கள் இருந்த தடங்களை முழுமையாக அழித்து அந்த இடங்களில் சிறுசிறு கட்டடங்களை முளைக்க வைத்து அதில் காசுப்பார்க்க ஒரு கூட்டம் தொடங்கிவிடும்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment