இரவு 11:35 மணி.. அறுபது வயதைக் கடந்த முதியவர். எதிரில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அனேகமாகப் பேரனாக இருக்கக்கூடும். அந்தச் சிறுவன் சிந்தாமல் சிதறாமல் ரசித்து ரசித்து ருசித்து ருசித்து ஒவ்வொரு துளியாக ஐஸ்கிரீமை அனுபவித்துக் கொண்டிருந்தான். அதை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் உதட்தோர புன்னகையை வெள்ளை மீசையும் தாடியும் தடுக்க, அவரின் கண்கள் எவ்வித தடையும் இல்லாமல் அகல விரிந்து சிரித்துக் கொண்டிருந்தன.
இதைவிட வேறென்ன வேண்டும் இன்றைய இனிதே வழியனுப்ப...!!!
கார்த்திக் பிரகாசம்...
இதைவிட வேறென்ன வேண்டும் இன்றைய இனிதே வழியனுப்ப...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment