உன் இதழ் ரேகைகள் இன்னும்
என் இதயத்தின் இளங்குருதியில்
அணுவணுவாய் அலைந்து திரிகிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
உன் மழலைக்குரல்
ஆதி முதல் அந்தம் வரை
உடலின்
அனைத்து புலன்களையும் பாரபட்சமின்றி
அணைத்துச் செல்கிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
நீ வீசிய புன்னகை
என் கண்களில் வானவில்லை மிஞ்சிய
வண்ணங்களை இன்னும்
வாரி இறைத்துக் கொண்டிருக்கிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
இலக்கின்றி எங்கெங்கோ
அலைந்தாலும் இறுதியில்
உன் நினைவே
இலக்காகி மனம் உருகி நிற்கிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
உனை நான்
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
கார்த்திக் பிரகாசம்...
என் இதயத்தின் இளங்குருதியில்
அணுவணுவாய் அலைந்து திரிகிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
உன் மழலைக்குரல்
ஆதி முதல் அந்தம் வரை
உடலின்
அனைத்து புலன்களையும் பாரபட்சமின்றி
அணைத்துச் செல்கிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
நீ வீசிய புன்னகை
என் கண்களில் வானவில்லை மிஞ்சிய
வண்ணங்களை இன்னும்
வாரி இறைத்துக் கொண்டிருக்கிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
இலக்கின்றி எங்கெங்கோ
அலைந்தாலும் இறுதியில்
உன் நினைவே
இலக்காகி மனம் உருகி நிற்கிறதே
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
உனை நான்
எப்படிக் கடந்துச் செல்ல...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment