பிறந்து சில தினங்களே ஆன நாய்க்குட்டியொன்றை ஆசை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்திருக்கிறாள் தோழி. இரவு ஏதொரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி திடீரென்று எழுந்து வந்து அவளுடைய கைகளுக்கு நடுவே தலைச்சாய்த்து படுத்து உறங்கியிருக்கிறது.
பசிக்கு அழுதக் குழந்தை தன் பால்கனிகளில் பாலுண்டு நன்கு பசியாறி உறங்குவது போலொரு காட்சிபேழை மனதில் மின்னலிட்டிருக்கிருக்கும் போலிருக்கிறது. சொல்லும் போது அவளுடைய கண்களில் அப்படியொரு ஆனந்த ஆர்ப்பாட்டம் அரங்கேறியது. பெண்ணாகப் பிறந்ததற்காக அவள் கொண்ட பெருமை அவளின் ஒவ்வொரு கண் அசைவிலும் அகப்பட்டது.
திருமணமாகாத அவள், ஆனந்தத்தில் ஒரு நிமிடம் தாய்மையின் சிலிர்ப்பை அனுபவித்திருக்கிறாள். பின்னே தாய்மையை உணர திருமணமாக வேண்டுமா என்ன பெண்ணாகப் பிறந்தாலே போதுமே..!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment