சிறுவர் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தவும், ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் போக்கவும், இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் வழித்தவறி சென்றுவிடாமல் நல்வழிப்படுத்தவும் வடசென்னையின் பல பகுதிகளில் அம்பேத்கர் மன்றங்கள் இன்னும் ஆணிவேராய் நின்றுக் கொண்டிருக்கின்றன.
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இம்மன்றங்களை ஆரம்பித்த இளைஞர்கள் இன்றுவரை தம் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாய் இருந்து உதவிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தக் கூடத்தில் மாலை வகுப்புக்காகக் கூடியிருந்த சிறுவர்களிடம், உங்களுக்கு பிடித்த தலைவர் யார்.? யாரைப் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்..? என்றுக் கேட்ட அடுத்த நொடி, "ஒரு சிறுவன் எழுந்து எனக்கு அம்பேத்கரைப் பிடிக்கும். அவரைப் போல ஆக நான் விரும்புகிறேன்"...!! என்று பொட்டில் அடித்தது போல் கூறினான். கைத்தட்டல்கள் ஓய கடிகார முட்கள் வேகமாய் ஓட வேண்டியிருந்தது
காலங்கள் மாறிவிட்டன. கனவுகள் நிறைவேறவில்லை ஆனால் நம்பிக்கை இன்னும் நீர்த்து போய்விடவில்லை...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment