"மல்லா" என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறந்து, வாழ்க்கையின் போக்கில் கொள்ளைக்காரியாக மாறி பின்பு மனம்திருந்தி தண்டனையை அனுபவித்து மக்களவை உறுப்பினராக இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட பூலான் தேவியின் மறுபக்கத்தைக் காட்டும் வாழ்க்கை வரலாறுதான் "நான் பூலான்தேவி".
பூலான் தேவி அச்சுறுத்தும் கொள்ளைக்காரியாகவும், பழிவாங்கும் கொலைக்காரியாகவும் ஆனதற்கு பின்னாலும் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் நியாங்களாக உருமாறி நிற்கின்றன. சிறுவயதில் இந்தச் சமூகம் அவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடுமைகளையே, பூலான் தேவி பிற்காலத்தில் இந்தச் சமூகத்தின் மீது பிரதிபலித்திருக்கிறார். அவர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் அவர்பக்க நியாயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு மு.ந.புகழேந்தி தமிழில் மொழிப்பெயர்த்துள்ள " நான் பூலான்தேவி" உதவியாக இருக்கும்.
அவர் கொலைக்காரி என்பதும்,கொள்ளைக்காரி என்பதும் உண்மையே. ஆனால் அவர் அவ்வாறு ஆனதற்கு இச்சமூகம் செய்த முன்வினைகள் ஏராளம்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment