கிணறு, ஏரி, குளம், குட்டை , ஆறு என அனைத்து நீர் ஆதாரங்களும் நீரைக் கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரும் இருந்த சுவடே இல்லாமல் நீர்த்து போய்விட்டன. குடிநீர் பற்றாக்குறையினால் உள்ளூர் மாவட்டங்களிலேயே வீட்டில் "தண்ணீர் கேன்களை" உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். காவிரி, பவானி, மேட்டூர் என பல்வேறு நீர் ஆதாரங்களையும், ஓடிக் கொண்டே இருக்கும் நதிகளையும், அசராமல் நிற்கும் நீர் நிலைகளையும் சுமந்து கொண்டிருந்த மாவட்டங்கள் இன்று பாட்டிலில் அடைத்த தண்ணீர் கேன்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றன. வானம் பார்த்த மண் வாயைப் பிளந்து மழையை எதிர்பார்த்து தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்து வரும் நாட்களில் கண்டிப்பாக மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென சில வானிலை நிபுணர்களின் தரப்பிலிருந்து கணிப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு மழை வரும்பட்சத்தில்(கண்டிப்பாக வரவேண்டும்) அதில் ஒரு துளியைக்கூட வீணடித்து விடாமல் சேமித்திட வேண்டும். இனிவரும் காலத்தில் சிக்கனத்தில் தண்ணீருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். மறைமுகமாக தண்ணீர் அதிகம் செலவாகும் அத்தனை விடயங்களையும் கண்டறிந்து தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். உதாரணமாக தினசரி வீடுகளில் கழிவறை மற்றும் குளியலறைகளில் வீணாக ஊற்றப்படும் நீரின் அளவைக் குறைக்கலாம். துணி துவைக்கும் போது, காய்கறி மற்றும் பாத்திரங்களைக் கழுவும் போது என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தண்ணீரின் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும். பயன்படுத்திய நீரை மறுசுழற்சிக்குட்படுத்தி வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும். நிலத்தடி நீரைக் காப்பதற்கான மற்றும் உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"தண்ணீர் போல் செலவழிக்காதே" என்று சொல்வடையைக்கூட பயன்பாட்டிலிருந்து அகற்ற வேண்டும். "தண்ணீர் வேண்டு"மென்றால் இதுமட்டுமில்லாமல் இன்னும் பல வேண்டும்"களைச் செய்தே ஆக வேண்டும்.
இப்பிறவிலேயே தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். இது நம் தலைமுறைக்கும், நம்மை அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நாம் செய்தாகவேண்டிய கடமை மட்டுமல்ல கட்டாயமும்கூட.. நீரைச் சேமிக்கவும், சிக்கனமாகப் பயன்படுத்தவும் முனைவோம்
மழை வரட்டும். வறண்டு போன மண்ணுக்கு வளம் கிடைக்கட்டும்.மக்கள் மறுவாழ்வு பெறட்டும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment