இடைத் தேர்தலை ரத்து செய்வது மட்டும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. மாறாக சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ தேர்தலில் நிற்கத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும்.
இப்படி பணம் விநியோகித்து வெல்பவர்கள்தான், இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க ஊழலிலும் இன்னபிற குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். "பணம் கொடுத்தால் ஜெயித்துவிடலாம்" என்று முழுமூச்சாக இறங்கிவிட்ட அரசியல் கட்சிகளின் மனோபாவத்தை மாற்றிட தேர்தல் ஆணையம் சில கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.
இதை ஏதொரு தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலுக்கானப் பிரச்னை என்று அலட்சியமாக விடமுடியாது. இது நாட்டின் "ஜனநாயகத்தை அரித்துக் கொண்டிருக்கும் கரையான் புற்று".
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்ததன் மூலம் எந்த நோக்கத்திற்காக நிறுத்தப்பட்டதோ அதை அடைய முடிந்ததா..? அதே வேட்பாளர்கள் அதே முறையைக் கடைபிடித்து அதே இடத்தில் வெல்கின்றனர். காரணம் வலிமையானக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இல்லாததே.
சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் ஆர்.கே நகர். இந்தப் பட்டியல் இனி நீளக்கூடாது. அதற்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறைக்கேட்டில் ஈடுபட நினைக்கும் அரசியல் கட்சிகளுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டும்.
"குற்றம் செய்தவனையும் கண்டிக்காமல், அந்தக் குற்றம் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணத்தையும் கண்டறிந்து களையாமல்" நியாயத்தை எப்படி நிலைநாட்ட முடியும்..!
சில சமயங்களில் தண்டனைகள் கடுமையானால்தான், தெரிந்தே செய்யப்படும் குற்றங்களும் முறைக்கேடுகளும் குறையும்.அத்தகைய விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் உடனடியாக உண்டாக்க வேண்டும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment