புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்...!!!
அக்கணம்
தேக்கி வைத்த
பிரியமெல்லாம்
தெளிந்த நீரோடையாகும்...!!!
விநாடி முள்ளின் ஓட்டத்தை
இதயத் துடிப்பு முந்தும்...!!!
சினிமா பாடல்களும்
ஞானப் பாடமாகும்...!!!
ஆயிரம் மைல் தொலைவும்
அரை விநாடியில்
நினைவுகளால் நிரம்பி வழியும்...!!!
தவறவிட்ட சந்தர்ப்பங்கள்
தன் மகிமையை குத்திக் காட்டும்...!!!
புன்னகைத்த தருணங்கள்
கண்ணீரைத் தரும்...!!!
கண்ணீரீன் உவர்ப்பும்
காதலை உணர்த்தும்...!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment