விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றால் பொதுவாக "மதியத்துக்கு என்னக் குழம்பு வைக்கட்டும்.? இன்னைக்கு இந்தப் பொரியல் செய்யட்டுமா.? நைட் தோசைக்கு தக்காளி சட்னி அரைக்கட்டுமா இல்ல சாம்பார் போதுமா.?" என்று கேட்பவள் இந்தமுறை "உனக்கு எந்த மாதிரி பொண்ணு பாக்கட்டும்" என்று கேட்டாள். ஒருகணம் என்னை தனியாகத் தூக்கியெறிந்துவிட்டு காலம் மட்டும் எங்கேயோ வெகு தொலைவிற்கு வந்துவிட்டதைப் போல் தோன்றியது. காலச்சக்கரத்தின் அதிவேகமான ஓட்டம் மனதில் கொஞ்சம் பதைபதைப்பை உண்டாக்கியது.
"உனக்கு ஏதோ பொண்ண புடிச்சு இருந்தக்கூட சொல்லு. பேசலாம்" என்றவளிடம் "அப்படிலாம் ஒண்ணும் இல்லம்மா" என்றதற்கு, பின்ன இப்படி தாடி வெச்சிருந்தா எந்தப் பொண்ணு தான்டா உன்ன பாக்கும். ஒழுங்கா ஷேவ் பண்ணிக்கிட்டு நெத்தில குங்குமம் வச்சிட்டு போனா பாக்காம போன பொண்ணுக்கூட திரும்பிவந்து ஒரு மொற பாத்துட்டு போகும் என்று கன்னத்தில் இடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டாள். பெண் பற்றியும்,கல்யாணம் பற்றியும் அம்மா வெளிப்படையாக நேருக்கு நேர் பேசுவது இதுவே முதல்முறை.
எந்த மாதிரி பொண்ணு பாக்கட்டும்..? என்று அவள் வீசியெறிந்த கேள்வி இதுவரையில் மனம் கண்டிராத கற்பனைத் தேனைச் சுரக்கச் செய்தது. நிலவை நிமிர்ந்து பார்க்க, நானே தனித்து இருக்கின்றேன் என்னிடம் போய் யோசனைக் கேட்கிறாயே..! என்று அலுத்துக் கொள்வதுபோல் அது மேகங்களைப் போர்த்தி தன்னை மறைத்துக் கொள்ள முயன்றது. தர்ம சங்கடம் தரவேண்டாமென்று தலையைக் குனிந்து கொண்டேன். கற்பனைக் கயிறோ அறுந்து அறுந்து பிணைந்தது உறக்கமோ விழியை பிரித்து பிரித்து விலகிச் சென்றது.
பால்கனியில் நானும் நிலவும் தனித்திருக்க அன்றைய இரவோ விருப்பமில்லாமல் விடியலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment