இரண்டு பெண்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அவர்கள் தோழிகள் இல்லை. சொந்தபந்தம் இல்லை. உடன் படித்தவர்கள் கிடையாது. இதற்குமுன் ஒருவருக்கொருவர் அறிமுகமே கிடையாது. இவர்கள் சந்தித்தற்கான காரணம் இதுதான். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இருபெரும் கொடும்சம்பவங்களின் ஆறா காயங்களின் வடுக்கள். இருவரும் சாதிய வன்முறையால் வாழ்க்கைத் தடத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள். "சாதி" என்னும் தீக்கு இரையாகி தங்கள் துணைகளை இழந்த திவ்யா மற்றும் கவுசல்யா.
தற்போது கவுசல்யா, சாதியம் மற்றும் கவுரவக் கொலை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யும் மத்திய அரசு அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருகிறார். அக்கம் பக்கம் வாழ்வோரின் கேலி பேச்சுகளுக்குள்ளாகி வெளியே வேறெங்கும் செல்லாமல் கல்லூரிக்கு மட்டும் சென்று வருகிறார் திவ்யா.
ஏதேதோ ஆசைகளுடன் தொடங்கும் வாழ்க்கை அர்த்தமற்ற மனிதநேயமற்ற செயல்களால் திக்கற்ற இருளான திசைகளில் திரும்பிவிடுகிறது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment