புகழுரை என்றறிந்ததும் அதை
ஒரே மூச்சில் உடனடியாக
வாசிப்பதில்லை
நான்
சிகரெட்டை
அடிப்பாதம் வரை
உள்ளிழுக்கும்
பயிற்சி பெற்ற நிபுணனைப் போல்
ஒவ்வொரு சொல்லையும்
மனதின் ஒவ்வொரு அறைக்குள்ளும்
உலாத்துவேன்
சொற்களை
மிஞ்சிய ருசி மருந்து
மனதிற்கு வேறெதுவுமில்லை
அதிலும் பாராட்டுச் சொற்கள்
ரசித்து ருசித்து
சொற்களின் சுயமைதுனம் நிகழும்
சுக்கிலம் கக்கிய குறியாய்
மனத்தின் சொற் போதை தளர்ந்ததும்
ஒரே மூச்சில் வாசிப்பேன்
சொற்களின் கூச்சல்
பிணத்தின் வாடையில்
உடலைக் கூசும்
கார்த்திக் பிரகாசம்...
வாசிப்பதில்லை
நான்
சிகரெட்டை
அடிப்பாதம் வரை
உள்ளிழுக்கும்
பயிற்சி பெற்ற நிபுணனைப் போல்
ஒவ்வொரு சொல்லையும்
மனதின் ஒவ்வொரு அறைக்குள்ளும்
உலாத்துவேன்
சொற்களை
மிஞ்சிய ருசி மருந்து
மனதிற்கு வேறெதுவுமில்லை
அதிலும் பாராட்டுச் சொற்கள்
ரசித்து ருசித்து
சொற்களின் சுயமைதுனம் நிகழும்
சுக்கிலம் கக்கிய குறியாய்
மனத்தின் சொற் போதை தளர்ந்ததும்
ஒரே மூச்சில் வாசிப்பேன்
சொற்களின் கூச்சல்
பிணத்தின் வாடையில்
உடலைக் கூசும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment