இன்றொரு விளம்பரம் பார்த்தேன்
சிறைகள் விற்பனைக்கு
பலவித உணர்ச்சிகளின் கண்ணீர் உப்பினைச் சேர்த்து
சோக வடிவமைப்பில் செதுக்கப்பட்ட
விதவிதமான சிறைகள்
வனத்தைக் கண்டிராத
கோவில் யானையின் சிறை
ஆகாசத்தை அளந்திடாத
கூண்டு பறவையின் சிறை
பணக்கார வீட்டு வராண்டாவில்
பிஸ்கட்டிற்கு வாலாட்டும்
காட்டு நாயின் சிறை
வண்டு தீண்டிடாத மலரின் சிறை
கணவனை இழந்த
இளம் விதவையின் சிறை
கால்கள் கட்டப்பட்ட
கழுதையின் சிறை
எதற்கும் ஆசைப்படாதது போல்
எல்லாவற்றையும் இழக்கும்
அம்மாக்களின் தியாகச் சிறை
ஒவ்வொன்றுக்கும் பயனர் கையேடு
காரணங்களோடு
வகுக்கப்பட்ட தகுதிகளோடு
வழிகாட்டுதலுடன்
குறிப்பிட்ட சிறைக்குள் செல்லலாம்
மாதத் தவணை உண்டு
ஆண்டுச் சந்தா செலுத்தி மாதமொரு சிறையை
வாடகைக்குப் பெறலாம்
சிறையிலிருந்து விடுபடவே முடியாதென்ற
யதார்த்த வாழ்வியலின் புரிதலில்
விரும்பிய துயர்வுறும் சிறையிலாவது
அடையலாமே எனச்
சொந்த சிறையை பரிமாற்றி
வேறு சிறைக் கேட்டேன்
அந்த சலுகை எக்காலத்துக்கும்
இல்லையென்றதால்
திரும்பி வந்துவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
பலவித உணர்ச்சிகளின் கண்ணீர் உப்பினைச் சேர்த்து
சோக வடிவமைப்பில் செதுக்கப்பட்ட
விதவிதமான சிறைகள்
வனத்தைக் கண்டிராத
கோவில் யானையின் சிறை
ஆகாசத்தை அளந்திடாத
கூண்டு பறவையின் சிறை
பணக்கார வீட்டு வராண்டாவில்
பிஸ்கட்டிற்கு வாலாட்டும்
காட்டு நாயின் சிறை
வண்டு தீண்டிடாத மலரின் சிறை
கணவனை இழந்த
இளம் விதவையின் சிறை
கால்கள் கட்டப்பட்ட
கழுதையின் சிறை
எதற்கும் ஆசைப்படாதது போல்
எல்லாவற்றையும் இழக்கும்
அம்மாக்களின் தியாகச் சிறை
ஒவ்வொன்றுக்கும் பயனர் கையேடு
காரணங்களோடு
வகுக்கப்பட்ட தகுதிகளோடு
வழிகாட்டுதலுடன்
குறிப்பிட்ட சிறைக்குள் செல்லலாம்
மாதத் தவணை உண்டு
ஆண்டுச் சந்தா செலுத்தி மாதமொரு சிறையை
வாடகைக்குப் பெறலாம்
சிறையிலிருந்து விடுபடவே முடியாதென்ற
யதார்த்த வாழ்வியலின் புரிதலில்
விரும்பிய துயர்வுறும் சிறையிலாவது
அடையலாமே எனச்
சொந்த சிறையை பரிமாற்றி
வேறு சிறைக் கேட்டேன்
அந்த சலுகை எக்காலத்துக்கும்
இல்லையென்றதால்
திரும்பி வந்துவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment