தூரத்து உறவுக்கார பெண்ணவள்
அடுத்த தெருவிலிருந்தாள்
பால்வாடி பருவந்தொட்டே
நானும் அவளும்
ஒன்றாய் பள்ளிக்குச் செல்வோம்
அன்பாய் பார்ப்பாள்
அன்பாய் பேசுவாள்
அன்பாய் கொஞ்சுவாள்
அன்பாய் சிரிப்பாள்
அன்பாய் கரம் பற்றுவாள்
கோவமும் அன்பாய்
என் கழுத்தில் தொங்கிக் கிடக்கும்
தண்ணீர் பாட்டிலைக்
கழுத்திலிருந்து எடுக்காமலேயே
கலைந்து போன முடிகள்
முகத்தை உரச
மூடியைக் கழற்றி
நீர் உறிஞ்சுவாள்
பெண் குழந்தை
பொம்மையை
தன் குழந்தையாகக்
கவனித்துக் கொள்வதையொத்த
கனிவன்பிருக்கும் பார்வையில்
சொப்பு சாமானத்தில் சமைத்து
மணக்க மணக்க ஊட்டுவாள்
செடிகளுக்குள்
தட்டான் பிடிக்கையில்
பாதத்தில் பத்திய முள்ளை
ஊக்குப் பின் வைத்து லாவகமாய் எடுப்பாள்
காலத்தோடு வளர்ந்தோம்
அரும்பு மீசை பருவத்தில்
பாவாடை தாவணியில்
கனவிலெங்கும்
பாட்டுப் பாடி திரிந்தாள்
டா போட்டுப் பேசுவாள்
நான் டி போட்டால்
உனக்கு நானென்ன பொண்டாட்டியா
எனச் செல்லமாய் ஏசுவாள்
தெளிக்கும் வெயிலிலும்
வானம் பார்த்து இதழ்
விரித்திருந்த சூரிய காந்தி மலரை
அவளுக்குப் பரிசளித்த நாளில்
சாதிய முறைப்படி
அவள்
உனக்குச் சகோதரி முறை
என்றாள் அம்மா
விரும்பிய பெண்ணை
விளங்காத சாதி வந்து
விலக்கியது
சாதியைச் சபித்தேன்
அலுவலக விடுப்பெடுத்து
ஆடித் திருவிழாவிற்கு
ஊருக்குப் போன ஓர் அமயத்தில்
சாதி முறையில் அவள்
கட்டிக் கொண்ட
நிலத்தில் கால் ஊன்றவும் நிதானமற்ற
குடிகார கணவனோடு
அவமானத்தில் ஊற்றெடுத்த கோவத்தில்
சாலையில் போராடி நின்ருந்தாள்
இடுப்பில் இருக்க வேண்டிய
அவனின் வேட்டியைக் கையில் ஏந்தியபடி
அவளின் முந்தானையைப் பிடித்து
கண்ணிலும் மூக்கிலும் நீர் வடியக்
குழந்தைகள் தேம்பின
திகட்டத் திகட்ட அன்பில் திளைத்த முகம்
நிரந்தர அழுகையில் ஊறியதால்
நைந்த பார்வையில் நடுங்கியது
என்னைக் கண்டதும்
காலாதீத நினைவுகளுடன்
வாசற்செடியில் வளர்ந்திருந்த
சூரிய காந்தி மலரைக் கண்டேன்
தலை கவிழ
வாடி வதங்கியிருந்தது
எப்போது வேண்டுமானாலும்
உதிர்ந்துவிடும் அபயத்துடன்
கார்த்திக் பிரகாசம்...
அடுத்த தெருவிலிருந்தாள்
பால்வாடி பருவந்தொட்டே
நானும் அவளும்
ஒன்றாய் பள்ளிக்குச் செல்வோம்
அன்பாய் பார்ப்பாள்
அன்பாய் பேசுவாள்
அன்பாய் கொஞ்சுவாள்
அன்பாய் சிரிப்பாள்
அன்பாய் கரம் பற்றுவாள்
கோவமும் அன்பாய்
என் கழுத்தில் தொங்கிக் கிடக்கும்
தண்ணீர் பாட்டிலைக்
கழுத்திலிருந்து எடுக்காமலேயே
கலைந்து போன முடிகள்
முகத்தை உரச
மூடியைக் கழற்றி
நீர் உறிஞ்சுவாள்
பெண் குழந்தை
பொம்மையை
தன் குழந்தையாகக்
கவனித்துக் கொள்வதையொத்த
கனிவன்பிருக்கும் பார்வையில்
சொப்பு சாமானத்தில் சமைத்து
மணக்க மணக்க ஊட்டுவாள்
செடிகளுக்குள்
தட்டான் பிடிக்கையில்
பாதத்தில் பத்திய முள்ளை
ஊக்குப் பின் வைத்து லாவகமாய் எடுப்பாள்
காலத்தோடு வளர்ந்தோம்
அரும்பு மீசை பருவத்தில்
பாவாடை தாவணியில்
கனவிலெங்கும்
பாட்டுப் பாடி திரிந்தாள்
டா போட்டுப் பேசுவாள்
நான் டி போட்டால்
உனக்கு நானென்ன பொண்டாட்டியா
எனச் செல்லமாய் ஏசுவாள்
தெளிக்கும் வெயிலிலும்
வானம் பார்த்து இதழ்
விரித்திருந்த சூரிய காந்தி மலரை
அவளுக்குப் பரிசளித்த நாளில்
சாதிய முறைப்படி
அவள்
உனக்குச் சகோதரி முறை
என்றாள் அம்மா
விரும்பிய பெண்ணை
விளங்காத சாதி வந்து
விலக்கியது
சாதியைச் சபித்தேன்
அலுவலக விடுப்பெடுத்து
ஆடித் திருவிழாவிற்கு
ஊருக்குப் போன ஓர் அமயத்தில்
சாதி முறையில் அவள்
கட்டிக் கொண்ட
நிலத்தில் கால் ஊன்றவும் நிதானமற்ற
குடிகார கணவனோடு
அவமானத்தில் ஊற்றெடுத்த கோவத்தில்
சாலையில் போராடி நின்ருந்தாள்
இடுப்பில் இருக்க வேண்டிய
அவனின் வேட்டியைக் கையில் ஏந்தியபடி
அவளின் முந்தானையைப் பிடித்து
கண்ணிலும் மூக்கிலும் நீர் வடியக்
குழந்தைகள் தேம்பின
திகட்டத் திகட்ட அன்பில் திளைத்த முகம்
நிரந்தர அழுகையில் ஊறியதால்
நைந்த பார்வையில் நடுங்கியது
என்னைக் கண்டதும்
காலாதீத நினைவுகளுடன்
வாசற்செடியில் வளர்ந்திருந்த
சூரிய காந்தி மலரைக் கண்டேன்
தலை கவிழ
வாடி வதங்கியிருந்தது
எப்போது வேண்டுமானாலும்
உதிர்ந்துவிடும் அபயத்துடன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment