வேலை முடிந்து
வீட்டுக்குத் திரும்பும் முனைப்பில்
அவசரமாகக் கயிற்றைக் கம்பத்திலிருந்து இறக்கி
முடிச்சுகளை நிதானமில்லாமல் அவிழ்க்கிறான்
வணிக வளாகத்தின் காவலாளி
வேடனிடம் சிக்கிய பறவையைப் போலத்
தலை கவிழ்ந்து தரையில்படத் தொங்குகிறது
தேசியக் கொடி
சரி விடுங்கள்!
தேசமே
தலை குப்புறக் கிடக்கையில்
தேசியக் கொடியில் என்ன இருக்கிறது
கார்த்திக் பிரகாசம்...
வீட்டுக்குத் திரும்பும் முனைப்பில்
அவசரமாகக் கயிற்றைக் கம்பத்திலிருந்து இறக்கி
முடிச்சுகளை நிதானமில்லாமல் அவிழ்க்கிறான்
வணிக வளாகத்தின் காவலாளி
வேடனிடம் சிக்கிய பறவையைப் போலத்
தலை கவிழ்ந்து தரையில்படத் தொங்குகிறது
தேசியக் கொடி
சரி விடுங்கள்!
தேசமே
தலை குப்புறக் கிடக்கையில்
தேசியக் கொடியில் என்ன இருக்கிறது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment