நான் சைக்கிள் வளர்க்கிறேன்
இருவருக்கும் ஒரே சிறகுகள்
நான் இல்லாமல் அது
பறக்க முயல்வதில்லை
அது இல்லாமல்
நானும் பறப்பதில்லை
ஒருசிலர் அதற்கு
'பருந்து' எனப் பெயரிடச்
சொன்னார்கள்
வேறுபலர்
'பீனீக்ஸ்' என்றார்கள்
ஆகாயமும்
பிரபஞ்ச வெளியும்
எல்லாருக்குமானது தானே
ஆதலால் அதற்கு
'தும்பி' எனப் பெயரிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
இருவருக்கும் ஒரே சிறகுகள்
நான் இல்லாமல் அது
பறக்க முயல்வதில்லை
அது இல்லாமல்
நானும் பறப்பதில்லை
ஒருசிலர் அதற்கு
'பருந்து' எனப் பெயரிடச்
சொன்னார்கள்
வேறுபலர்
'பீனீக்ஸ்' என்றார்கள்
ஆகாயமும்
பிரபஞ்ச வெளியும்
எல்லாருக்குமானது தானே
ஆதலால் அதற்கு
'தும்பி' எனப் பெயரிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment